நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி ‘49-ஓ’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். உடல்நலக் குறைவு காரணமாக சில காலம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி ‘வாய்மை’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அதைத்தொடர்ந்து கவுண்டமணி நாயகனாக நடிக்கும் படம்தான் ‘49-ஓ’. ஆரோக்கிய தாஸ் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். ‘49-ஓ’ படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயியாக நடிக்கிறார். அவர்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் படமாக இப்படம் அமையும். அதே சமயம் நகைச்சுவைக்கும் முக்கியத்தும் உள்ள படமாகவும் இருக்கும்.
‘49-ஓ’ (49-O) என்பது தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விதி. எந்த ஒரு விஷயத்தையும் யார் சொல்கிறார்களோ அவர்களைப் பொறுத்து அது மக்களிடம் எளிதில் சென்றடையும். நிச்சயம் இந்தப்படத்தின் மூலமாக 49-ஒ பிரபலமாகும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
Post a Comment