Powered by Blogger.
Latest Post
Showing posts with label திரை முன்னோட்டம். Show all posts
Showing posts with label திரை முன்னோட்டம். Show all posts

49 ஓ - முன்னோட்டம்

Written By Namnilam on Thursday, April 24, 2014 | 10:17 AM

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி ‘49-ஓ’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.  உடல்நலக் குறைவு காரணமாக சில காலம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி ‘வாய்மை’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அதைத்தொடர்ந்து கவுண்டமணி நாயகனாக நடிக்கும் படம்தான் ‘49-ஓ’. ஆரோக்கிய தாஸ் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். ‘49-ஓ’ படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயியாக நடிக்கிறார். அவர்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் படமாக இப்படம் அமையும். அதே சமயம் நகைச்சுவைக்கும் முக்கியத்தும் உள்ள படமாகவும் இருக்கும்.


‘49-ஓ’ (49-O) என்பது தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு விதி. எந்த ஒரு விஷயத்தையும் யார் சொல்கிறார்களோ அவர்களைப் பொறுத்து அது மக்களிடம் எளிதில் சென்றடையும். நிச்சயம் இந்தப்படத்தின் மூலமாக 49-ஒ பிரபலமாகும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

போங்கடி நீங்களும் உங்க காதலும் - முன்னோட்டம்

Written By Namnilam on Monday, April 21, 2014 | 10:55 AM

ரீச்ட்ரீம் மீடியா சார்பில் குமரன், கார்த்திகேயன், முத்துராமன், செல்வராஜ் ஆகியோர் வழங்க கே.ஆர்.கே.மூவீஸ் கே.ஆர்.கண்ணன் தயாரிக்கும் படம் போங்கடி நீங்களும் உங்க காதலும்.


இதில் நாயகனாக எம்.ஏ.ராமகிருஷ்ணன் நடிக்கிறார். இவரே இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார். நாயகிகளாக ஆத்மியா, காருண்யா நடிக்கின்றனர். ஜெயபிரகாஷ், இமான் அண்ணாச்சி, சாமிநாதன், சென்ராயன் ஆகியோரும் நடிக்கின்றனர்.


படம் பற்றி எம்.ஏ.ராமகிருஷ்ணன் சொல்கிறார்.


பெண்கள் பலம், பலகீனம், ஆண்கள் மீது வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கை. அதை பல ஆண்கள் காப்பாற்றுவது இல்லை. காதலிக்கும் போது இருக்கும் அன்பு அக்கறை திருமணத்துக்கு பின் குறைந்து வருகிறது. இதை சில ஆண்கள் தவறாக பயன்படுத்தி தற்போதைய தொழில்நுட்பங்கள் மூலம் பெண்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் இடையூறு தந்து சமூக அவலங்களுக்கு ஆளாக்கி வாழ்வை சிரழிக்கின்றனர். அப்படி ஒரு தப்பான நட்பு காதலால் ஏற்படும். பாதிப்புகளை பெண்களுக்கு உணர்த்தும் விதமாக உருவானதே இப்படம்.


இதில் நாயகன், நாயகி முத்த காட்சி உள்ளது. படம் பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டி யு சான்றிதழ் அளித்துள்ளனர்.


ஒளிப்பதிவு: எம்.வி.பன்னீர்செல்வம், இசை: கண்ணன், பாடல்: அண்ணாமலை, எடிட்டிங்: வசந்த அய்யப்பன். இம்மாதம் இறுதியில் ரிலீசாகிறது.

அழகு குட்டி செல்லம் - முன்னோட்டம்

மெர்குரி நெட்வொர்க்ஸ் சார்பில் ‘நீயா நானா’ அந்தோனி தயாரிக்கும் படம் ‘அழகு குட்டி செல்லம்’. இதில் கல்லூரி அகில் நாயகனாக வருகிறார். கருணாஸ், தம்பிராமையா, ஆடுகளம் நரேன், ஜான் விஜய், சுரேஷ், நாராயணன், கிருஷா, சிம்பா, வினோதினி, வைத்தியநாதன், ரித்விகா, யாழினி, மீரா கிருஷ்ணன், சேட்டன், பிரியா, தேஜாஸ்வினி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


இப்படத்தை சார்லஸ் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.


குழந்தைகளை மையப்படுத்தி இப்படம் தயாராகிறது. குழந்தைகள் மூலம் நடக்கும் நல்லது கெட்டதுகள் திரைக்கதையாக்கப்பட்டு உள்ளது. குழந்தை இல்லாத தம்பதி, குழந்தைகளோடு வாழும் தம்பதி என பல தரப்பட்ட பெற்றோரை இப்படம் அலசும் கிளைமாக்ஸ் எல்லா பிரச்சினைகளையும் முடித்து வைக்கும் வகையில் இருக்கும். படப்பிடிப்பு முடிந்துள்ளது என்றார்.


தயாரிப்பாளர் அந்தோனி கூறும் போது நல்ல கதை என்பதால் இப்படத்தை தயாரித்தேன். படம் முடிந்து பார்த்த போது திருப்தியாக இருந்தது. இதுபோன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களை தொடர்ந்து தயாரிப்பேன் என்றார்.


ஒளிப்பதிவு: விஜய் ஆம்ஸ்ட் ராங்க், இசை: வெட்ஷங்கர் சுகவனம், எடிட்டிங்: பிரவின் பாஸ்கர், ஸ்டன்ட்: ஸ்பீடுமோகன், வசனம்: அய்யப்பன்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - முன்னோட்டம்

சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'. இவருக்கு ஜோடியாக ஆஷ்னா சாவேரி நடிக்கிறார். இவர்களுடன் மிர்ச்சி செந்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடி நடிகர் ஸ்ரீநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். சித்தார்த் இசையமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.


இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிப்பதற்கென தீவிர எடை குறிப்பில் ஈடுபட்டு இருபது வயது இளைஞன் போல் மாறியுள்ளார். மேலும் நடனம், சண்டை பயிற்சிகளையும் மேற்கொண்டு உள்ளார்.


சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் படத்தின் முன்னோட்டம் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் யூடியூப்பில் 5 நாட்களில் 5 லட்சம் பார்வையாளர்களையும் தாண்டி திரை உலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு சந்தானத்தை சக கதாநாயகர்களுடன் சம அளவில் பொருத்தியுள்ளது.

மஞ்சப்பை - முன்னோட்டம்

Written By Namnilam on Saturday, April 19, 2014 | 11:14 AM

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு படைப்பாக உருவாகி வரும் படம் மஞ்சப்பை. இப்படத்தை அறிமுக இயக்குனர் ராகவன் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் சற்குணத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். விமல் இந்தப் படத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடி லட்சுமி மேனன். ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.


படத்தை பற்றி இயக்குனர் ராகவன் கூறியிருப்பதாவது, உறவுகள்லேயே மிகவும் உன்னதமானது உறவுனா அது தாத்தா-பேரன் உறவுதான். அது இரண்டு தலைமுறைகளோட அன்பு விளையாட்டு. இதில் தாத்தாவாக ராஜ்கிரணும், பேரனாக விமலும் நடிக்கிறார்கள். இரண்டு பேரும் இணையும் இடத்தில் காமெடியும் சென்டிமென்டும் இருக்கும். லட்சுமிமேனன் மார்டன் பொண்ணா நடிச்சிருக்காங்க.


கிராமத்துலேருந்து சென்னைக்கு வரும் அப்பாவி இளைஞனை மஞ்சப்பைன்னு கூப்பிடுறது வழக்கம். அப்படி ஒரு அப்பாவியின் வாழ்க்கை கதைதான் இது என்று ராகவன் தெரிவித்தார்.

வை ராஜா வை - முன்னோட்டம்

கவுதம் கார்த்தி - ப்ரியா ஆனந்த் நடிக்க ஐஸ்வர்யா இயக்கும் படம் வை ராஜா வை. மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கவுதம். இவர் நடிகர் கார்த்திக் மகன். தனது 2-வது படமாக கவுதம் கார்த்திக் 3 திரைப்படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வை ராஜா வை படத்தில் நடிக்கிறார்.

கதாநாயகன் கவுதம் கார்த்திக், கதாநாயகி ப்ரியா ஆனந்த், விவேக், இயக்குநர் எஸ்.எம்.வசந்த், ஸ்ரீரஞ்சனி ஆகியோருடன் ஜெய், பூர்ணிமா உள்பட பலர் நடிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்தார். யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

திருமணம் எனும் நிக்காஹ் - முன்னோட்டம்

ஜெய் நடிக்கும் புதிய படத்திற்கு ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ என்று பெரியடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் இயக்குனரும், நடிகருமான நாசரின் உதவி இயக்குனர் அனீஸ் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். நஸ்ரியா நஜீம் மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார்.


‘ஐ, வல்லினம், பூலோகம், மரியான், ’ போன்ற படங்களைத் தொடர்ந்து ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ எனும் படத்தையும் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படம் குறித்து ஜெய் கூறியதவாது: எங்கேயும் எப்போதும் திரைப்படத்துக்குப் பிறகு கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு ஒரு முக்கிய படமாக அமையும் என்றார்.

இரும்பு குதிரை - முன்னோட்டம்

பாலாவின் பரதேசியில் 'நியாயமாரே..' என சோகத்தைப் பிழிந்த அதர்வா அடுத்து முழுநீள ஆக்ஷனில் இறங்கிவிட்டார். இந்தப் படத்துக்கு இரும்புக்குதிரை என பெயரிடப்பட்டுள்ளது. பரதேசிக்குப் பிறகு ரொம்ப நாளாக பல கதைகளைக் கேட்டு, முக்கியமாக அவற்றுக்கு பாலாவின் ஒப்புதலுக்காக காத்திருந்தாராம் அதர்வா. அப்படி பாலா ஓகே சொன்ன கதைகளில் ஒன்றுதான் இந்த இரும்புக் குதிரை.


ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. யுவராஜ் இயக்குகிறார். ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்த வியட்நாம் - அமெரிக்க நடிகர் ஜானி ட்ரை நூகி நடிக்கிறார் (அதாங்க டாங் லீ). ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்க, ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே இதே நிறுவனம் தயாரிக்கும் ஐஸ்வர்யா தனுஷின் வை ராஜா வையிலும் ப்ரியா ஆனந்த்தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி நம்ம நாட்டுப் பழமா..?

Written By Namnilam on Saturday, March 8, 2014 | 12:00 PM

பப்பாளி நம்ம நாட்டுப் பழமா..?இப்படியொரு கேள்வியை, மக்கள் மத்தியில் கேட்டு, பப்பாளி படத்திற்கு வித்தியாசமான முன்னோட்டத்தினைச் செய்திருக்கிறார்கள்.


பப்பாளி நம்ம நாட்டுப் பழம் எனப் பலரும், தெரியாதெனச் சிலரும் பதில் சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் பப்பாளி நம்ம நாட்டுப்பழமா..?


ஆனால் பப்பாளி படத்தின் கதை நமது குடும்பங்களின் கதையென்கிறார், இப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் சரண்யா பொன் வண்ணன். இப்படத்தின் இணை இயக்குனர் போலவே செயற்பட்டார் சரண்யா என, இசைவெளியீட்டின்போது இயக்குனர் மூர்த்தி வெளிப்படையாகப் பாராட்டினார்.


நாயகன் செந்தில் உட்பட மேலும் பல இயக்குனர்களும் கலந்து கொண்ட பப்பாளி படத்தின் இசைவெளியீட்டின் வீடியோத் தொகுப்பினைக் கீழே காணலாம்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger