Home » » கலையும் முடியை 5 நிமிடத்தில் சரி செய்யலாம்

கலையும் முடியை 5 நிமிடத்தில் சரி செய்யலாம்

Written By Namnilam on Saturday, April 19, 2014 | 9:41 PM

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முடி தான் அவர்களின் அழகின் அம்சம். அந்த முடியை நாம் எப்போதும் முறையாக பராமரித்து வந்தால் அது நம்மையே மிகுந்த அழகுடன் பிரதிபலிக்கச் செய்யும். சில நேரங்களில் என்னுடைய முடி ஏன் இப்படி அசிங்கமாக இருக்கின்றது? என்று நீங்கள் எண்ணியிருக்கலாம் இவ்வாறு நீங்கள் மட்டுமல்ல பலரும் நினைக்கிறார்கள். இது பொதுவாக அனைவருக்கும் நடக்கும் விஷயம் தான். இது சாதாரண நாட்களில் நடந்தால் நம்மால் சகித்துக்கொள்ள முடியும். இதே சில முக்கியமான நாட்களில் நடந்தால் நமக்கு மிகுந்த சங்கடமாகிவிடும்.


இப்படிப்பட்ட முடியை எப்படி கையாளுவது என்று தெரிந்து கொண்டால் சில இக்கட்டான சூழ்நிலைகளில் இது உதவியாக இருக்கும். முடிகளில் சிறந்த ஸ்டைல்களை உருவாக்க கற்றுக் கொள்வது பிற்காலத்தில் நிச்சயம் கை கொடுக்கும். இதனால் நிறைய பிரச்சனைகள் தீரும்.


முக்கியமாக, நேர்காணல் போன்ற விஷயங்களுக்கு செல்லும் போது, முடி கலைந்து விட்டால் உடனடியாக சரிசெய்து கொள்ளலாம். இது சிறிது கடினமாக இருந்தாலும், கற்றுக் கொண்டு செய்தால் சுலபமாகிவிடும். இந்த பகுதியில் இத்தகைய காரியங்களை எப்படி செய்வது என்பதை நாம் படித்து தெரிந்துக் கொள்ளலாம்.


ஹேர் ஸ்பிரே


ஒரு வேளை நீங்கள் சுருட்டை முடி உடையவராக இருந்தால் முடியை நன்றாக சீவிய பின், உறங்கி எழுந்தால் அதன் விளைவு எண்ண ஆகும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இப்படி படர்ந்து இருக்கும் முடியை எப்படி சரி செய்வது. உங்களுக்கு ஒரு வழி உண்டு. ஹேர் ஸ்பிரே ஒன்றை வாங்கி பயன்படுத்தி பாருங்கள். இப்படி பறந்து அசிங்கமாக இருக்கும் முடியை கூட இது சரி செய்துவிடும். உங்கள் முடியை சரியாக சீவிய பின் இதை மேல் பகுதியில் ஸ்பிரே செய்தால் போதும். நீண்ட நேரத்திற்கு முடி கலையாமல் இருக்கும்.


கிரிம்ப் செய்யுங்கள்


எண்ணெய் வைத்த முடியுடன் அதிக நேரம் தூங்கி விட்டீர்களா? தலைக்கு குளிக்க நேரம் இல்லை என்று கவலையா? கவலை வேண்டாம். இந்த முடியிலேயே கிரிம்பிங் செய்து கொள்ளுங்கள். இவை மிக சிறப்பானதாகி விடும். கிரிம்பிங் செய்து ஒரு குதிரைவால் ஜடை போட்டால் மேலும் அழகாக காட்டும். அதுமட்டுமல்லாமல் உங்களது நாளையும் மிக சிறப்பானதாக்கி விடும்.


எப்படி தலை முடியை சீவலாம்?


முடியை சீவும் போது முகத்தில் விழாமல் சீவினால் அது உங்களுடைய முகத்தை அப்பழுக்கற்ற வகையில் வெளிப்படுத்தும். இப்படி முடியை வைத்துக் கொண்டு நான் எப்படி போவது என்று நீங்கள் நினைத்தால் இது தான் சிறந்த வழியாகும். நன்கு இழுத்து சீவினால் அது மிக வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும். எப்போதும் அழகுபடுத்திக் கொண்டு பளபளப்பாக முடியை ஸ்டைல் செய்து கொள்ள முடியாது. இத்தகைய ஸ்டைல்களையும் அவ்வப்போது செய்யலாம்.


ஸ்கார்ஃப் அணிவது


நீங்கள் எங்காவது செல்லும் போது முடி கலைந்துவிட்டால் அல்லது எண்ணெய் நிறைந்த முடியை வைத்துக்கொண்டு எப்படி வெளியே செல்வது என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதற்கும் ஒரு வழி உண்டு. தலையில் ஒரு ஸ்கார்ஃப் கட்டிக் கொள்ளுங்கள். அது அழகாக மட்டுமல்லாமல் ஸ்டைலாகவும் அமைந்துவிடும்.


பன் கொண்டை


முடியின் அடிப்பகுதியில் வெடிப்புக்கள் வருவது இயல்பு தான். ஆனால் பெரும்பாலும் முடியை வெட்ட விரும்பாத பெண்கள் ஸ்டைலான முடி பாவணைகளை செய்து கொள்ள விரும்பமாட்டார்கள். வெடிப்புக்கள் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று எண்ணுவார்கள். இதற்காக கவலைப்பட வேண்டாம். ஒரு பெரிய பன் கொண்டையை வாங்கி வைத்துக் கொண்டு சில நிமிடங்களில் அதை மாட்டிக் கொள்ளலாம். இது பழமையான வழிமுறையானலும் செழுமையான அழகை உங்களுக்கு கொடுக்கும்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger