பிரான்சின் முக்கிய நகரான லா ரோசில்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவி, பள்ளிக் கழிவறையில் கடந்த வாரம் இரவு நேரத்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில் கழிவறையில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததால் பலாத்காரம் செய்தவரை அந்த மாணவியால் அடையாளம் காணமுடியவில்லை.
இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவி மற்றும் அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர். பள்ளி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தது. போலீஸார் நடத்தி விசாரணையில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுதது குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் மரபணு சோதனை நடத்த அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி 475 மாணவர்கள், 31 ஆசிரியர்கள், 21 பணியாளர்கள் என 500 க்கும் மேற்பட்டோரிடம் மரபணு சோதனை நடத்தப்படுகிறது.
Post a Comment