ஐநா. மனித உரிமைகள் பேரவையிலும் ஐநா. பாதுகாப்பு சபையிலும் சீனா தொடர்ச்சியாக இலங்கைக்கு ஒத்துழைப்பு நல்கும் என தெரிவித்துள்ளது.
அலரி மாளிகையில் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த சீன உதவி வெளிவிவகார அமைச்சர் திரு. லியு செமின் அவர்கள் ஐநா. பேரவை கூட்டங்களில் சீனா தொடர்ச்சியாக இலங்கைக்கு ஒத்துழைப்பு நல்கும் எனத் தெரிவித்தார்.
ஐநா. மனித உரிமைகள் பேரவையிலும் ஐநா. பாதுகாப்பு சபையிலும் நாங்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஒத்துழைப்பு நல்குவோம். என்று குறிப்பிட்ட லியு, இலங்கை எப்பொழுதும் சீனாவை நண்பனாகவே காணும் எனத் தெரிவித்தார்.
இவ்வருடம் நடைபெற்ற ஐநா. மனித உரிமைகள் பேரவையில் சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு சனாதிபதி நன்றி தெரிவித்தார். கடந்த மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக சீனா வாக்களித்தது. அத்துடன் இலங்கையின் இறைமையையும் தேசிய பாதுகாப்பையும் சீனா பாதுகாத்தது.
நாங்கள் 30 ஆண்டுகள் துன்பப்பட்டோம் உங்களுடைய உதவியால் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்தது´ என்று ஜனாதிபதி கூறினார். இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளுக்கு தனிப்பட்ட முறையில் அக்கறை காட்டுவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு திரு.லியு நன்றி தெரிவித்தார்.
நீங்கள் சீனத் தலைமைத்துவத்துடன் நெருங்கிய நற்புறவை ஸ்தாபித்துள்ளீர்கள் எனக் குறிப்பிட்ட லியு இந்த தனிப்பட்ட நல்லுறவானது இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான நல்லுறவுக்கு காத்திறமான முறையில் பங்களிக்கும் என அவர் தெரிவித்தார்.
கடந்த தசாப்தங்களில் இலங்கைக்கு சீனா வழங்கிய உதவிகளுக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி சீனாவின் உதவியுடன் பல தனித்துவமான உட்கட்டமைப்பு கருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் இலங்கை கைத்தொழிலில் முதலீடு செய்யும்படி சீன முதலீட்டாளர்களுக்கு சனாதிபதி அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது ´கட்டமைப்பு கூட்டுறவில்´ இருதரப்பு நல்லுறவுகள் மேம்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். கடந்த ஆண்டு சீனாவில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது சீனா தொடர்ச்சியாக இலங்கையுடனான நல்லுறவை பலப்படுத்திக்கொள்ளும் எனவும் புதிய துறைகளில் சமப் பங்காளர்களாக அதன் கூட்டுறவை விரிவுப்படுத்திக்கொள்ளும் எனவும் உப சனாதிபதி லி யுவான்சாவோ குறிப்பிட்டிருந்தார்.
´உட்கட்டமைப்பு, பொருளாதாரம். வர்த்தகம், முதலீடு என்பவற்றில் தொடர்ச்சியாக இணைந்து செயலாற்றுவோம் எனக் குறிப்பிட்ட திரு.லியு எங்களுடைய கூட்டுறவானது உயர் மட்டத்திற்கு விரிவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையின் சமநிலை வர்த்தகம் தொடர்பாக குறிப்பிட்ட சீன உதவி வெளிவிவகார அமைச்சர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை இதற்கு பெரிதும் உதவும் எனவும் குறிப்பிட்டார்.
சீனாவைப் பொறுத்தவரையில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கை ஒரு முக்கியமான பங்காளியாக இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர் 21ஆம் நூற்றாண்டின் கடல்வழி பயண அபிவிருத்திக்கு உதவியமைக்காக இலங்கைக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் இருநாடுகளும் கடல்வழி வான்வழி தொடர்புகளை விரிபுப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். எல்லாக் காலத்திலும் நண்பனாக இருக்கின்ற இலங்கையைப்பற்றி குறிப்பிட்ட திரு. லியு, இலங்கை ஒரு நல்ல நண்பன், ஒரு நல்ல அயல் நாடு, ஒரு நல்ல பங்காளி எனத் தெரிவித்தார்.
Post a Comment