Home » » சன்னி லியோன் நீலப்பட நடிகை என்று தெரியாது, வடகறி இயக்குனர் தடாலடி

சன்னி லியோன் நீலப்பட நடிகை என்று தெரியாது, வடகறி இயக்குனர் தடாலடி

Written By Namnilam on Thursday, April 17, 2014 | 3:57 PM

ஜெய், சுவாதி நடிக்கும் வடகறி படத்தை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் தயாரிக்கிறது. வெங்கட் பிரபுவின் உதவியாளர் சரவண ராஜன் இயக்குகிறார். இதில் பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.


இதனை தாய்லாந்தில் ஷூட் செய்திருக்கிறார்கள். சன்னி லியோன் படங்களுக்கு தமிழ் நாட்டில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் சன்னி லியோன் நீலப்பட நடிகை என்பதே தனக்கு தெரியாது என்று கூறுகிறார் இயக்குனர் சரவண ராஜன்.


நிருபர்களிடம் அவர் கூறியதாவது : “படத்தில் கிளைமாக்சிற்கு முன்பு ஒரு குத்துப்பாடல் ஒன்று வருகிறது. அதில் பிரபலமானவர் ஒருவர் ஆடினால் படத்துக்கு பிளஸ்சாக இருக்கும் என்று கூறினேன்.


அப்போது இந்திப் படங்களில் கவர்ச்சியாக ஆடி புகழ்பெற்ற சன்னி லியோனை ஆட வைக்கலாம் என்று தயாரிப்பாளர் சொன்னார். இது பற்றி சன்னி லியோனிடம் பேசினார்கள். தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்து சன்னி அதற்கு உடனே ஒப்புக் கொண்டார்.


தமிழ்நாட்டில் செட் போட்டு அந்த பாடலை எடுக்க முடிவு செய்தோம். அதைவிட தாய்லாந்தில் எடுப்பது செலவு குறைவு என்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அவர் பாவாடை தாவணி அணிந்து ஆடியிருக்கிறார். சன்னி நீலப்பட நடிகை என்பது எனக்குத் தெரியாது.


அவர் நடித்த படங்கள் எதையும் நான் பார்த்ததில்லை. பாடலை படமாக்கியது டான்ஸ் மாஸ்டர்தான். அதனால் அவருடன் நான் அதிகமாக பேசியதும் இல்லை. இது எல்லாமே தயாரிப்பாளிரின் முடிவு தான்” என்றார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger