Home » » தாய்ப்பால் கொடுப்பது பற்றிய சில உண்மைகள்

தாய்ப்பால் கொடுப்பது பற்றிய சில உண்மைகள்

Written By Namnilam on Saturday, April 19, 2014 | 9:10 AM

தாய்ப்பால் என்பது பிறந்த குழந்தைக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் குழந்தையின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முதன்மையான உணவுப்பொருள் தான் தாய்ப்பால். தாய்ப்பால் கொடுப்பது தானே என்று பல பெண்கள் சாதாரணமாக நினைக்கலாம். ஆனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் போது பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கக்கூடும். அத்தகையவற்றை யாரும் அவ்வளவு எளிதில் சொல்லமாட்டார்கள். ஆனால் இவற்றைப் பற்றி முன்பே கர்ப்பிணிகள் தெரிந்து கொண்டால், சற்று ஈஸியாக இருக்கும்.


இப்போது இதுவரை உங்களுக்கு யாரும் சொல்லாத, தாய்ப்பால் கொடுப்பது பற்றிய சில உண்மைகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கும்:


பிரசவம் முடிந்த பின்னர், உடலில் உள்ள ஹார்மோன்கள் மெதுவாக சுரக்க ஆரம்பிப்பதால், தாய்ப்பாலானது மார்பகங்களில் மெதுவாகத் தான் பாய ஆரம்பிக்கும். அப்போது தாய்ப்பாலானது சாதாரணமாக வர சற்று தாமதமாகும். ஆகவே அந்நேரத்தில் பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, மார்பக நுனிகளை கசக்கி குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இது சற்று கஷ்டமாக இருக்கும்.


பாரமாக இருக்கும்:


தாய்ப்பாலானது மார்பகங்களில் சீராக பாயும் போது, மார்பங்களானது மிகவும் பாரமாக இருக்கும். இதற்கு காரணம், மார்பகங்களில் பாரம் அதிகம் இருக்கும் போது, மார்பகங்களானது தொங்க ஆரம்பிக்கும். எனவே இக்காலத்தில் வேண்டுமானால் மகப்பேறு பிராக்களை அணிந்து கொள்ளலாம்.


ஈரமாகும்:


ஹார்மோன்களின் சுரப்பைப் பொறுத்து தான் தாய்ப்பாலின் சுரப்பு இருக்கும். அதிலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றால், மார்பகங்களில் இருந்து தாய்ப்பாலானது கசிய ஆரம்பிக்கும். அப்போது உடைகளில் எல்லாம் தாய்ப்பாலின் கறைகள் படிய ஆரம்பிக்கும்.


மார்பக நுனிகளில் காயங்கள்:


தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள உண்மைகளில் ஒன்று தான், மார்பக நுனிகளில் காயங்கள் ஏற்படுவது. பொதுவாக இத்தகைய காயங்களானது குழந்தைக்கு சரியான நிலையில் இருந்து தாய்ப்பால் கொடுக்காததால் ஏற்படும்.


அதிகப்படியான சோர்வு:


தாய்ப்பாலானது உற்பத்தி ஆகும் போது, அது உடலில் அதிகப்படியான எனர்ஜியை எடுத்துக் கொள்ளும். அதிலும் ஆரம்ப காலத்தில் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருக்கும். இப்படி கொடுக்கும் போது, மாதவிடாய் சுழற்சி வந்தால், இது இன்னும் மோசமான சோர்வை உண்டாக்கிவிடும். எனவே தான் பிரசவம் முடிந்த பின்னர், பெண்கள் நன்கு சாப்பிட்டு, போதிய ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.


குழந்தைக்கு பிடித்த மார்பகம்


breastfeeding_2


பெரும்பாலான குழந்தைகள் ஒரு பக்கத்தில் மட்டும் தான் பால் குடிப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அந்த பக்க மார்பகம் தான் பிடித்திருக்கும். அப்படி பிடித்திருக்க மற்றொரு பக்கத்தில் இருந்து தாய்ப்பாலின் சுரப்பானது அதிகரித்து, பாலானது வெளிவர ஆரம்பிக்கும். இது மிகவும் பெரும் பிரச்சனையாக இருக்கும்.


மார்பக நுனியின் அளவு:


மார்ப நுனியின் அளவு மிகவும் சிறியதாகவோ அல்லது மிகவும் பெரியதாக இருந்தாலோ, குழந்தையால் பால் குடிக்க முடியாமல் அவஸ்தைப்படும். அப்போது நீங்களும் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவீர்கள்.


மார்பகங்கள் விரிவடைவது:


சரியான இடைவெளியில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காவிட்டால், மார்பகங்களில் தாய்ப்பாலானது அதிகரித்து விரிவடைந்து, கடுமையான வலியை உண்டாக்கிவிடும். எனவே அவ்வப்போது தாய்ப்பாலை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தாய்ப்பாலை அமுக்கி வெளியே எடுக்க வேண்டும்.


முதுகு வலி:


தாய்ப்பால் கொடுக்கும் போது சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தவறான நிலையில் தாய்ப்பால் கொடுப்பது. அதிலும் புதிய தாய்மார்களுக்கு எப்படி தாய்ப்பால் கொடுப்பது என்று தெரியாததால், அவர்கள் கடுமையான முதுகு வலியை சந்திப்பார்கள்.


குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பிப்பது:


தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பித்துவிட்டால், குழந்தைகள் மார்பக நுனிகளை சில நேரங்களில் கடிப்பார்கள். இதனால் கடுமையான காயங்கள் ஏற்படக்கூடும்.


தூக்கமில்லாத இரவுகள்:


தாய்ப்பாலில் 80 சதவீத தண்ணீர் இருப்பதால், இது குழந்தைக்கு எளிதில் செரிமானமடைந்துவிடும். இதனால் குழந்தைக்கு அடிக்கடி பசிக்க ஆரம்பிக்கும். அதிலும் இரவில் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை எழுந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டிவரும். இதனால் பல இரவுகள் தூங்கவே முடியாது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger