உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆத் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார். கடந்த ஒரு மாதமாக குமார் விஸ்வாஸ் அமேதி தொகுதியில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அமேதியில் குமாருக்கு ஆதரவு திரட்ட நேற்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அமேதி தொகுதிக்கு சென்றார். அங்கு அயோத்தி நகர் பகுதிக்கு சென்று ஒரு இடத்தில் வேனில் நின்றபடி பேசினார்.
அப்போது, அங்கு சுமார் 100–க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டிருந்தனர். திடீரென அவர்கள் கெஜ்ரிவாலை எதிர்த்து கோஷமிட்டனர். ராஜீவ் காந்தி வாழ்க, ஆட்சி செய்த முடியாத நீ டெல்லிக்கே ஓடு என்று கூச்சலிட்டனர். இதை கண்டு கெஜ்ரிவால் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அந்த பெண்களை கெஜ்ரிவால் சமரசம் செய்ய முயன்றார். ஆனால், அந்த பெண்கள் அமைதி அடைய வில்லை. அதற்கு மாறாக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள். இதனால் வேறு வழியின்றி கெஜ்ரிவாலும், அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
Post a Comment