இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதியின் கோரிக்கைக்கு ஏற்ப ஆரம்பிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க சமாதான முயற்சிகளை அரசாங்கம் குழப்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தந்தை செல்வா நினைவு நிகழ்வவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்து ,
“பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பது இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய ஒரு அரங்கம் அல்ல. தமிழர் தரப்புக்கும் அரச தரப்புக்குமிடையில் ஒரு இருதரப்பு பேச்சுவார்ததைகள் நடந்து, அதில் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பிப்பதாக இருந்தால் நாங்கள் கலந்துகொள்ள முடியும் என்று கூறினோம். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆகவே இன்று ஜனாதிபதியினுடைய கோரிக்கைக்கு இணங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி, அவர் ஒரு பிரத்தியேக தூதுவரை இந்தப் பிரச்சினைகளை கையாள்வதற்காக நியமித்திருக்கிறார். ஏற்கனவே இலங்கையின் அரசாங்கத்தின் ஒரு தூதுக்குழு போய் அவரை சந்தித்திருக்கின்றது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஒரு தூதுக்குழு அங்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றார்.
இப்பொழுது அவர் இங்கு வந்து இங்குள்ள நிலைமைகளைப் பார்த்து ஜனாதிபதியுடனும் தமிழர் தரப்பினரிடமும் பேசுவதற்கு வருகின்ற மே மாதக்கடைசியில் ஜூன் மாதத்தில் வர இருக்கின்றார்கள். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இன்று மீண்டும் பாராளுமன்ற தெரிவுக்குழுவைப் பற்றி போசுவது என்பது, தாங்களே வரவழைத்த தாங்களே கேட்ட இந்த தென்னாபிரிக்காவின் சேசுவார்த்தையை குழப்ப முயற்சி செய்கிறார்கள என்பது தான் கருத்தாகும்.”
அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றி ஜனநாயக சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment