மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு கைதிகளுக்கு, மீண்டும் மரண தண்டனையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது.
இதற்காக இந்திய அரசியல் சாசனத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யவிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை, உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு மரண தண்டனைகளை ஆயுள் தண்டனைகளாக குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய அனைத்து தீர்ப்புகளையும் ரத்து செய்யுமாறு, இந்திய மத்திய அரசாங்கம் தமது மனுவில் கோரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment