மஸ்கெலியா நகரில் இருந்து மாலை வேளையில் தோட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில், மதுபோதையில் வரும் இளைஞர்களால் பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட யுவதிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மஸ்கெலியாவில் இருந்து சாமிமலை, காட்மோர், நோட்டன், ஹட்டன் மறே போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் இந்த நிலைமை அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் பயணிக்கும் இளைஞர்கள் மாணவிகளையும், யுவதிகளையும் பல்வேறு வகைகளில் இம்சித்து வருவதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக காவற்துறை திணைக்களத்தை எமது செய்திப்பிரிவு தொடர்பு கொண்ட போது, சிவில் உடையில் பேருந்துகளில் காவற்துறையினரை அனுப்பி, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
Post a Comment