வடமாகாண சபையில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்கள், பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்வைக்கப்பட்டால் அதுகுறித்து கலந்துரையாட முடியும் என ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையில் கடந்த திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் வழங்கிய செவ்வியில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்றால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பிலும் பயங்கரவாத தடை சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பிலும் கலந்துரையாட முடியும் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவோருக்கும் அமைப்புக்களுக்கும் எதிராகவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய தடைகள் தேவையற்றது என கருதினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தடை செய்யப்பட்டுள்ள புலம் பெயர் அமைப்புக்கள் அல்லது வடமாகாண சபையின் முதலமைச்சர் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அதனை தெரிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment