Home » » ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் இறுதித் தீர்ப்பு இன்று

ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் இறுதித் தீர்ப்பு இன்று

Written By Namnilam on Friday, April 25, 2014 | 6:30 AM

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும் இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் அறிவித்தது. இதனையடுத்து 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. இது குறித்து மத்திய அரசு 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கெடு விதித்தது.


இந்நிலையில் 7 பேரின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்ற்த்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்து வந்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்று வெளியாகவுள்ள தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger