Home » » பாராளுமன்ற சிறப்புரிமையின் கீழ் த.தே.கூட்டமைப்பினர் பதுங்கியுள்ளனர், மகிந்த

பாராளுமன்ற சிறப்புரிமையின் கீழ் த.தே.கூட்டமைப்பினர் பதுங்கியுள்ளனர், மகிந்த

Written By Namnilam on Friday, April 25, 2014 | 6:23 AM

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமையின் கீழ் பதுங்கிக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் வைத்து இன்று செய்தி ஆசிரியர்களுடன் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் போன்றோர் அரசாங்கத்துக்கு எதிராக வெளியிட்டு வருகின்ற கருத்துக்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


பாராளுமன்ற சிறப்புரிமைக்குள் ஒழிந்துக் கொண்டு இவ்வாறு கருத்து வெளியிடுவதாலேயே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger