எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றுமாறு சோசலிச கட்சிகள் கோரிக்கை விடுக்கவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் சோசலிச கட்சிகள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுக்கவுள்ளன.
2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனை தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தை பதவி கவிழ்க்க உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஏதேனும் ஓர் காரணத்தினால் ஆட்சிப் பொறுப்பு வேறும் தரப்பிடம் கை மாறினால் நாடு சர்வாதிகார ஆட்சி முறைமையை நோக்கி நகரும்.
அமைச்சர்கள் என்ற ரீதியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு ஏற்கனவே கோரியுள்ளோம். நாடாளுமன்றிற்கு பொறுப்பு கூறக்கூடிய ஓர் பிரதமரின் தலைமையிலான ஆட்சியொன்றை உருவாக்குவதே மிகவும் பொருத்தமானதாக அமையும் என திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
சோசலிச கட்சிகளினால் நடத்தப்பட உள்ள மே தினக் கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போதேடி அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment