ஏழாவது ஐ.பி.எல். போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது. 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்' என்ற அடுத்த சுற்றுக்குள் நுழையும். அபுதாபியில் நேற்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஸ்மித்- மெக்கல்லம் தடுமாற்றம்
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மித் மற்றும் மெக்கல்லம் இறங்கினர். ஆனால் மெக்கல்லம் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உனத்காட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரெய்னா, ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து நிதானம் காட்டியதுடன் ரன் குவிப்பிலும் ஈடுபட்டார். 28 பந்துகளில் 29 ரன்கள் அடித்த ஸ்மித், நதீம் பந்தில் வீழ்ந்தார். நிலைத்து ஆடிய ரெய்னா அரைசதம் கடந்த நிலையில் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பிளெஸ்சிஸ்- டோணி
அதேபோல் பிளெஸ்சிஸ் -டோணி இணைந்து ரன்களைக் குவித்த சென்னை அணியின் ஸ்கோர் 150ஐ தாண்டியது. பிளெஸ்சிஸ் 24 ரன்கள், கேப்டன் டோணி 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். ஜடேஜா - 7ரன்கள், அஸ்வின் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது
தடுமாறிய டெல்லி
இதனை அடுத்து ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தொடக்க ஆட்ட வீரர்களில் அகர்வால் 2 ரன்களிலும் விஜய் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.டெல்லி அணியில் அதிடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட டுமினி 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஸ்மித்தின் பந்தில் அவுட் ஆனார். கார்த்திக் 21 அதேபோல் கார்த்திக்கும் கூட 21 ரன்களைத்தான் எடுத்த நிலையில் அவுட் ஆனார். டெல்லி டேர்டெவில்ஸ் அணி 84 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் ஆட்டம் நிறைவடைந்தது. இதனால் 93 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி 84 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் ஆட்டம் நிறைவடைந்தது. இதனால் 93 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது.
முதலாவது வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவிய நிலையில் தற்போது டெல்லியை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
Post a Comment