ராஜஸ்தானுக்கு எதிராக சென்னை அணி 7 ரன்னில் வெற்றி பெற்றது. 36 ரன்களுடன் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஆட்டம் குறித்து அவர் கூறியதாவது,
நான் பேட்டிங் செய்ய வந்தபோது மிகவும் கடினமாக இருந்தது. இதனால் கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தது சந்தோஷம். பிட்ச் மெதுவாகவும், பந்து நன்றாக திரும்பும் விதமாகவும் இருந்தது. இதனால் நேர்த்தியாக பந்து வீசினால் 140 ரன்கள் போதுமானது என்று நினைத்தோம்.
பிட்ச் பந்து வீச்சுக்கு சாதமாக இருந்ததால் அனுபவித்து பந்து வீசினேன். இதனால் 4 விக்கெட்டுகள் வீழ்த்த முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி குறித்து டோனி கூறியதாவது, கடைசி சில ஓவர்கள் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இது ஒரு சிறந்த போட்டியாகும். ஆடுகளம் மெதுவாக இருந்ததால் அவர்களுக்கு பேட்டிங் செய்ய கடினமாத இருந்திருக்கும். ஈஸ்வர் பாண்டே சிறப்பாக பந்து வீசினார். ஸ்மித் பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு உதவியது. அதன்பின் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறியது.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து வாட்சன் கூறியதாவது, இந்தத் தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஏதாவது ஒரு பார்ட்னர் ஷிப் நிலையாக நின்றிருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்.
பேட்டிங் பலம்வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக எங்கள் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. நாங்கள் சில யார்க்கர் மற்றும் வைடு பந்தை தவிர்த்து இருக்கலாம். இதை சரிசெய்து அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Home »
விளையாட்டு
» ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை, ஜடேஜா ஆட்டநாயகன்
ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை, ஜடேஜா ஆட்டநாயகன்
Written By Namnilam on Thursday, April 24, 2014 | 5:20 AM
Labels:
விளையாட்டு
Post a Comment