இலங்கை அணியின் முன்னாள் கேப்டன்கள் ஜெயவர்த்தனே, சங்ககரா. இலங்கை அணி சமீபத்தில் 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல இருவரது ஆட்டமும் முக்கிய பங்கு வகித்தது. 20 ஓவர் உலக கோப்பையோடு ஜெயவர்த்தனேவும், சங்ககராவும் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர்.
ஓய்வு தொடர்பாக வெளியான தகவல்கள் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கும், அவர்களுக்கும் மோதல் உருவானது. இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை இருவரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இது தொடர்பாக ஜெயவர்த்தனே, சங்ககரா ஆகியோர் மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இருவரும் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து உள்ளனர். இதனால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Post a Comment