Home » » புத்தர் உருவத்தை பச்சை குத்திய பெண் நாடு கடத்தப்பட்டார்

புத்தர் உருவத்தை பச்சை குத்திய பெண் நாடு கடத்தப்பட்டார்

Written By Namnilam on Wednesday, April 23, 2014 | 12:11 PM

மும்பையில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு திங்கட்கிழமை காலை இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் வந்தார். தனது வலது கையில் தாமரை மலரில் புத்தர் அமர்ந்திருப்பது போன்ற உருவப் படத்தை அவர் பச்சை குத்தியிருந்தார்.


இது புத்தமத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை காவல்துறையில் ஒப்படைத்தனர். பின்னர் நீர்க்கொழும்பு நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவரை, நாடு கடத்துவதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இலங்கையில் புத்தமதவாதம் மிக தீவிரமாக தலைவிரித்தாடுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதே பெண்மணி புத்தமதத்தை கடைபிடிக்கும் கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளார் . ஆனால் அங்கெல்லாம் அவரை யாரும் கேள்வி கேட்கவில்லை . புத்தரை ஏற்றுக் கொண்டு புத்தரை பெருமைப்படுத்தும் விதமாகத் தான் இந்தப் பெண்மணி தனது கையில் பச்சை குத்தியுள்ளார் .


ஆனால் இது கூட தவறென்று சிங்கள இனவாத அரசு கூறிவிட்டு அவரை நாடுகடத்த உத்தரவிட்டது . மேலும் அவரிடம் பணம் பறிக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர் . அவரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூபாய் 5000 கேட்டுள்ளனர் வழக்கறிஞர்கள் . அதையும் இப்பெண்மணி கொடுத்துள்ளார் . மேலும் பல வழிகளில் இப்பெண்ணை மிரட்டி உள்ளனர் சிங்கள அதிகாரிகள்.


இந்த நிகழ்வுக்கு முன் , புத்தர் சிலையை முத்தமிட்டதற்கு ஒரு வெளிநாட்வரை சிங்கள அரசு கைது செய்து சிறையில் அடைத்தது . இன்னொரு வெளிநாட்டவர் புத்தர் உருவத்தை உடலில் பச்சை குத்திய காரணத்திற்கு ஆறு மாதம் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கியது என்பதும் குற்ப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger