Home » » மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லை ?

மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லை ?

Written By Namnilam on Wednesday, April 23, 2014 | 12:16 PM

மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகவில்லை எனவும், அது வேறு எங்கேயாவது தரையிறங்கியிருக்கலாம் எனவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. தேடுதல் குழு தவறான இடத்தில் தேடுதலை மேற்கொள்வதாகவும் விமானம் வேறு எங்கேயாவது தரையிறங்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


MH370 விமானம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் சர்வதேச குழுவினை மேற்கோள்காட்டி நியு ஸ்ட்ரெட்ஸ் டைம்ஸ் (New Straits Times) என்ற மலேசிய நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.


விமானம் காணாமல் போய் 45 நாட்களுக்கு பிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடந்த மாதம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.


கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி எம்.எச்370 மலேசிய விமானம் காணாமல் போனது. இது மேற்கு அவுஸ்திரேலியா கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி இருக்கலாமென கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடுலை முன்னெடுத்துள்ளன.


இதேவேளை, காணாமல் போன மலேசிய விமானம் குறித்து ஒரு வாரத்தில் தகவல் கிடைக்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் கடந்த 20 ஆம் திகதிஅ நம்பிக்கை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger