யாழ் அல்லைப்பிட்டி பகுதியில் வெற்றுக்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஜே-10 கிராம சேவக பிரிவில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் உள்ள பனைமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த ஐங்கரன் பிரதீபன் (வயது-19) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று முன் இரவு (25) பெற்றோருடன் முரண்பட்ட பின்னர் வீட்டில் இருந்து வெளியேறிய தாகவும் பின்னர் நேற்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் காண்பதாக இறந்தவரின் தந்தை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இறந்தவர் மதுபோதையில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகிறன்றனர்.
Post a Comment