உடுப்பிட்டிதொகுதி, கொற்றாவத்தையில் வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனுடனான மக்கள் சந்திப்பு கொற்றாவத்தை கலைவாணி சனசமூக நிலையத்தில், அதன் தலைவர் இ. திலீபன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
மக்கள் தம் பகுதியில் நிலவும் பல பிரச்சினைகள் பற்றிய கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில் முக்கிய பிரச்சினையாக வீதிப்பிரச்சினை, அமெரிக்க மிஷன் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் இடமாற்றங்களில் நிலவும் பாகுபாடுமுறை என்பன பற்றிக் குறிப்பிட்டார்கள்.
பதிலளித்துப்பேசிய மாகாண சபை உறுப்பினர் இவ்விடயங்களை எமது முதலமைச்சர், போக்குவரத்து அமைச்சர், கல்விஅமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்வுகளைப்பெற்றுத்தர முயற்சிக்கிறேன். எங்களால் பல தடைகளின் மத்தியில் முழுமையான தீர்வுகளை எட்டமுடியாவிட்டாலும் எம் சக்திக்குட்பட்ட வகையில் தீர்வுகளைப் பெற்றுத்தர முயற்சிக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.
இம்மக்கள் சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி. தென்மேற்கு(மானிப்பாய்) பிரதேச சபை உறுப்பினர் அ.ஜோன் ஜிப்றிக்கோ, சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் அவ்வூரைச்சேர்ந்த டொக்டர்.க.வேலும்மயிலும், சி.பூபாலன், செ.செல்வரஞ்சன் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post a Comment