கஜபாபுரம் வட மாகாண சபைக்கு சொந்தமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெலிஓயா கஜபாபுரம், வட மாகாணசபைக்கு சொந்தமானது என மாகாண சபை உறுப்பினரான துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கஜபாபுரத்தை ஈழ இராஜ்ஜியத்தின் ஓர் பகுதியாக அடையாளப்படுத்திய விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர் என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக கஜபாபுரத்திலிருந்து சிங்கள மக்கள் வெளியேறியிருந்தனர். தற்போது குறித்த பிரதேசத்தில் மக்கள் மீளவும் குடியேறி வருகின்றனர். இவ்வாறு குறித்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment