Home » » வடக்கில் புலிகளை உயிர்ப்பிக்க சந்தோசம் மாஸ்டர் என்பவர் முயற்சி,திவயின

வடக்கில் புலிகளை உயிர்ப்பிக்க சந்தோசம் மாஸ்டர் என்பவர் முயற்சி,திவயின

Written By Namnilam on Friday, April 25, 2014 | 9:15 AM

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்க சந்தோசம் மாஸ்டர் என்பவர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தோசம் மாஸ்டர் எனப்படும் பரமநாதன் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.


அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னர் சந்தோசம் மாஸ்டர் சுவிட்சர்லாந்து சென்று தஞ்சமடைந்துள்ளார். சுவிட்சர்லாந்தின் இரண்டு வங்கிகளில் வங்கிக் கணக்குகளை பேணி வருவதாகவும், 40 புலிச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 60 செல்லிடப் பேசிகளைக் கொண்ட புலிகள் வலையமைப்பு ஒன்றினை சந்தோசம் மாஸ்டர் வழிநடத்தி வருவதாக குறிப்பிடப்படுகிறது.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger