Home » » விபத்தில் ஒருவர் மரணம்; ஐவர் காயம்

விபத்தில் ஒருவர் மரணம்; ஐவர் காயம்

Written By Namnilam on Friday, May 2, 2014 | 12:28 PM


முந்தல் புகையிரத நிலையச் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் மாரவில முதுகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த சுதத் சமந்த (வயது 23) என்பவர் மரணமடைந்துள்ளதுடன், ஐவர் படுகாயமடைந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.


மாரவிலவிலிருந்து புத்தளத்திற்கு பயணித்துக்கொண்டிருந்த பஜிரோ ரக வண்டியும் புத்தளத்திலிருந்து பயணித்துக்கொண்டிருந்த கப் ரக வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


பஜிரோ ரக வண்டியில் பயணித்த இளைஞரே விபத்தில் மரணமடைந்துள்ளார்.இரு வாகனங்களின் சாரதிகளையும் கைதுசெய்த முந்தல் பொலிஸார், விபத்திற்குள்ளான இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.இவ்விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger