Home » » பூநரியில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தக் கோருகிறது பிரதேச சபை

பூநரியில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தக் கோருகிறது பிரதேச சபை

Written By Namnilam on Thursday, May 15, 2014 | 10:47 PM

பூநகரி கௌதாரி முனைக் கிராமத்தில் அனுமதியின்றி ஆழமாக மணல் அகழப்படுவதால் அப்பகுதியிலுள்ள குடிதண்ணீர் கிணறுகள் உவர் நீராக மாறும் அபாயம் தோன்றியுள்ளது. எனவே சட்டவிரோத மண் அகழ்வைத் தடுத்துநிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளார் பூநகரிப் பிரதேச சபைத் தவிசாளர்.


இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கௌதாரிமுனைக் கிராமத்திலுள்ள பல காணிகள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானவை. தற்பொழுது கட்டட அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்து இடம்பெறுவதால் மணலுக்குத் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இக்காணிகளில் மலை போல் குவிந்திருக்கும் மணல், தினசரி 50 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் ஏற்றப்பட்டு யாழ். மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் கடல் மட்டத்திலும் பார்க்க மிக ஆழமாக மணல் அகழப்படுவதால் இப்பகுதியிலுள்ள குடிதண்ணீர்க் கிணறுகள் உவர் நீராக மாறும் அபாயம் தோன்றியுள்ளது. எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger