போர் முடிவுக்கு வந்த பின்னர் நாடு பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற போதிலும், அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு வெளிநாட்டு உதவிகள் எதுவும் இலங்கைக்குத் தேவையில்லை என ஐ.தே.க.வின் முன்னாள் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க. எம்.பி.யுமான சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கின்றார்.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் 21 ஆவது நினைவு தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார். கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பிரேமதாசவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
ஐ.தே.க.வின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் எவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. அம்பாறையில் நடைபெற்ற கட்சியின் மே தின வைபவத்தில் பங்குகொள்வதற்காகச் சென்றிருந்தமையால் அவர்களால் இதில் பங்குகொள்ள முடியாமல் போய்விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment