Home » » மானிட்டர் பிரச்சனைகளை தீர்க்க சில வழிகள்

மானிட்டர் பிரச்சனைகளை தீர்க்க சில வழிகள்

Written By Namnilam on Thursday, May 8, 2014 | 9:54 PM

இன்றைக்கு கம்ப்யூட்டர் சரியாக இயங்கினாலும் மானிட்டர் தகராறு செய்தால் நம் கதி அதோ கதி தான். நாம் ஏதேனும் அவசரமாக பணியாற்ற வேண்டும் என எண்ணுகையில் மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படுவதுடன், பொறுமையிழந்து என்ன செய்வது எனத் தெரியாமல் பதட்டமடைவோம்.


மேலும், மற்ற துணை சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ, கடனாகவோ பெற்று அப்போதைக்கு நம் கம்பியூட்டர் பணியை முடிக்கலாம். மவுஸ், கீ போர்டு, ஸ்பீக்கர், ஏன் சிடி மற்றும் பிளாப்பி டிரைவ் கூட உபரியாக வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம், அல்லது பழைய கம்ப்யூட்டரில் இருந்து கழட்டி வைத்ததைக் கொண்டு இயங்கலாம். ஆனால் மானிட்டரில் பிரச்னை ஏற்ட்டால் அது இயலாது. உபரியாக ஒன்று வைத்துக் கொள்ளவும் முடியாது, ஏனென்றால் இடம், விலை நமக்குக் கட்டுபடியாகாது.


monitor-1


மற்றவரிடமிருந்து இரவல் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் அதனைப் பொறுமை யாக, என்ன பிரச்னை என அலசிப் பார்ப்பதே சிறந்தது. அதற்கான சில வழிகளை இங்கு பார்ப்போம். உங்கள் கம்ப்யூட்டர் நன்றாக இயங்கி மானிட்டரில் எந்த சிக்னலும் வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும் வழிக்கே சென்று விடலாம்.


முதலில் மானிட்டருக்குச் செல்லும் மின்சாரம் இயக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மிகவும் பழைய, பல ஆண்டுகளுக்கு முந்தைய, கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டராக இருந்தால் கம்ப்யூட்டரின் சிபியூவில் இருந்தே மானிட்டருக்கு பவர் கேபிள் செல்லும். இது சரியாகப் பொருந்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும். எதற்கும் ஒரு முறை எடுத்து மீண்டும் சரியாகப் பொருத்திப் பார்ப்பதே நல்லது. தற்போதைய மானிட்டர் எனில் அதற்கு தனியே பவர் லைன் பிளக் கார்ட் இருக்கும் அது சரியானபடி பவர் பிளக் சாக்கெட்டில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கவும். அந்த பிளக்கிற்குத் தனியான ஸ்விட்ச் இருந்தால் அது ஆன் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும்.


மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது, அது ஆன் செய்யப் பட்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ள ஒரு சிறிய எல்.இ.டி. லைட் இருக்கும். இது மெலிதான ஆரஞ்ச் நிறத்தில் இருந்தால் மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது ஆனால் கம்ப்யூட்டரின் சிபியூவிலிருந்து சிக்னல் வரவில்லை என்று பொருள். அடுத்ததாக உங்கள் மானிட்டரில் டிவியில் பிரைட்னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் அட்ஜஸ்ட் செய்வதற்கான ஸ்விட்ச் கண்ட்ரோல் கொடுத்திருப்பார் கள். இதனை அட்ஜஸ்ட் செய்து பார்க்கவும். சில வேளைகளில் நாம் இல்லாத போது குழந்தைகள் இந்த கண்ட்ரோல் ஸ்விட்சுகளை அழுத்தி மாற்றி வைத்திருப்பார்கள். எனவே இவற்றை அட்ஜஸ்ட் செய்தால் மானிட்டர் சரியாகலாம்.


அடுத்ததாக மானிட்டருக்கு வரும் விடியோ கேபிளைச் சரி செய்து பார்க்கவும். அது சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து மீண்டும் ஒரு முறை கழட்டி மாட்டவும். இன்னொரு மானிட்டர் கிடைத்தால் அல்லது வீட்டில் இருந்தால் அதனை இந்த சிபியூவில் மாட்டிப் பார்க்கவும். வீடியோ கேபிள் பழையதையே மாட்டவும். இப்போதும் சரியாகக் காட்சி கிடைக்க வில்லை என்றால் விடியோ கேபிள் சரியில்லை என்று பொருள். இந்த கேபிளை மாற்றிப் பார்க்கலாம்.


முடியுமென்றால் சந்தேகத்திற்குரிய மானிட்டரை இன்னொரு கம்ப்யூட்டரில் பொருத்திப் பார்க்கவும். அப்படியும் மானிட்டர் சரியாக இயங்கவில்லை என்றால் மானிட்டரில்தான் கோளாறு இருக்கிறது என்பது உறுதியாகிறது. கம்ப்யூட்டரில் பிரச்னை இல்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் உங்கள் மானிட்டருக்குப் பதிலாகப் புதிய மானிட்டர் வாங்கிப் பொருத்த வேண்டும். அல்லது நல்ல டெக்னீஷியனாகப் பார்த்து மானிட்டரை ரிப்பேர் செய்திட வேண்டும்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger