இலங்கை அரசுக்கு எதிராக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 20ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐ.தே.க. நாடாளுமன்ற உறப்பினர்கள் 32 பேர் ஒப்பமிட்டு இலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கடந்த பெப்ரவரி மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தனர். இந்த பிரேரணை மீது விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்துவது குறித்து, நேற்றைய நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் 20ஆம், 21ஆம் திகதிகளில் இந்த விவாதத்தை நடத்தி வாக்கெடுப்பு நடத்துவதெனதத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற அமர்வுகளின்போது வாய்மூல,எழுத்துமூல கேள்வி - பதில் நேரங்களில் அரச தரப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையில் இருப்பதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இந்த நிலை தொடருமானால் தான் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்யவேண்டி வரும் என்று நேற்று எச்சரித்தார்.
Post a Comment