ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இடம்பெயர் முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 16 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம். பௌசீ, ரிசாத் பதியூதீன், எ.எம்.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட பல முக்கிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
முஸ்லிம் மக்கள் உரிய முறையில் மீள்குடியேற்றப்படாத காரணத்தினால் முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு சிங்கள பௌத்த அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
சிங்கள ராவய, பொதுபலசேனா மற்றும் ராவணா பலய போன்ற பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
Post a Comment