வேற்று கிரகவாசிகள் என அழைக்கப்படும் ஏலியன்ஸ் குறித்து பரவலாக ஒரு பேச்சு இருக்கிறது. அது மனிதர்களிடம் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது என்றும் ஆனால், அது மனிதர்களுக்கு தெளிவாக புரிவதில்லை என்றும் கூறப்படுகிறது.இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சமந்தா மெக்டொனால்டு என்ற பெண் தன்னை ஏலியன்ஸ் கடத்த முயற்சித்தனர் என அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு உள்ளார். அவர் கூறும்போது, கடந்த 1990ம் ஆண்டில் இருந்து வேற்று கிரக வாசிகள் தன்னை வந்து பார்த்துள்ளனர்.
ஆனால், என்னால் அந்த அனுபவத்தை நினைவுபடுத்தி பார்க்க முடியவில்லை. எனது நினைவில் இருந்து அவை நீங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால், தூங்கி எழும்போது, ஊசி போட்ட அடையாளம் உள்ளிட்ட காயங்களுடன் தான் காணப்பட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார்.வேற்று கிரகத்தில் இருந்து வரும் அவர்களை தி ரெப்டீலியன்ஸ் மற்றும் தி கிரேஸ் என்று அழைக்கும் சமந்தா அவை ஒன்றாக இணைந்து பணியாற்றுபவை என நம்புகிறார். சமந்தா மேலும் கூறுகையில், நான் அவர்களை பார்த்து என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், உன்னையும், உனது குடும்பத்தையும் எடுத்து செல்ல வந்திருக்கிறோம் என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.
அவர்கள் ஏன் தொடர்ந்து என்னிடம் வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் தியானம் மேற்கொள்வதால் எனது சக்தி குறித்து அறிவதற்காக அவர்கள் வருகிறார்கள் என நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உங்களை கடத்தியதாக கூறும் நீங்கள் அப்பொழுது நடந்தது என்ன என்று தெரிவியுங்கள் என்று கேட்டதற்கு, நீங்கள் கடத்தப்பட்டதை குறித்த நினைவுகளை கொண்டிருக்க முடியாது.ஏனென்றால், உங்களது நினைவுகள் அழிக்கப்பட்டு விடும். நீங்கள் வேறு எங்கோ இருக்கிறீர்கள் என்பதை உணர முடியும். ஆனால், உங்களால் உண்மையில் அதனை நினைவுபடுத்தி பார்க்க இயலாது என்று கூறியுள்ளார்.
Post a Comment