Home » » பஞ்சாப்பிற்கு முதல் தோல்வி, மும்பைக்கு முதல் வெற்றி

பஞ்சாப்பிற்கு முதல் தோல்வி, மும்பைக்கு முதல் வெற்றி

Written By Namnilam on Sunday, May 4, 2014 | 2:55 PM

ஐபிஎல் போட்டியின் 22-வது ஆட்டத்தில் பஞ்சாப் அணி மும்பை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக் மற்றும் புஜாரா களம் கண்டனர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சேவாக் ரன் அவுட் ஆனார்.


அடுத்து சாஹா களமிறங்கினார். மிக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சேவாக்கை தொடர்ந்து புஜாரா 19 ரன் ( 4 பவுண்டரி) அவுட் ஆனார். அடுத்து பஞ்சாப் அணி நட்சத்திர நாயகன் மேக்ஸ்வெல், சாஹாவுடன் இணைந்தார். இருவரும் மிக வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். மேக்ஸ்வெல் 27 பந்துகளில் 45 ரன்களுடன் வெளியேறினார். அவரை தொடர்ந்து கேப்டன் பெய்லி மற்றும் மில்லர் சொற்ப ரன்களே அடித்த நிலையில் வெளியேறினர்.


சாஹா அரைசதம் கடந்தார். சாஹா இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 47 பந்துகளில் 59 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதில் 4 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளும், கோரி ஆண்டர்சன் மற்றும் மலிங்கா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


169 ரன்கள் இலக்கை விரட்ட தொடங்கிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சரியான தொடக்கத்தை அளிக்கவில்லை. டங்க் 5 ரன்னிலும் அம்பதி ராயுடு 8 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து ஜோடி சேர்ந்த கோரி ஆண்டர்சன் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அணியை நல்ல நிலைக்கு கொண்ட செல்ல பாடுபட்டனர்.


இருவரும் வேகமாக ரன் சேர்க்க ஆரம்பித்தனர். அணியின் ஸ்கோர் 124ஐ எட்டிய போது ரோகித் 39 ரன்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கோரி ஆண்டர்சன் 35 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து ஜோடி சேர்ந்த பொல்லார்டு மற்றும் டாரே மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை ருசித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. பொல்லார்டு 28 (12), டாரே 16(6) ரன்கள் அடித்தனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger