Home » » காரணமின்றி மூடப்படுகிறது யாழ்.பல்கலைக்கழகம்?

காரணமின்றி மூடப்படுகிறது யாழ்.பல்கலைக்கழகம்?

Written By Namnilam on Tuesday, May 6, 2014 | 7:02 PM

மே 18 ஐ முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தைப் பூட்டுவதற்கு முயற்சி புலனாய்வாளர்கள் உள் நுழைவதற்கான சிறப்பு அனுமதியும் வழங்கப்பட்டது.


ஈழத்தமிழர்து வரலாற்றில் மறக்க முடியாத "முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை" நினைவு தினமாகிய மே 18 ஈம் நாளில் யாழ்.பல்கலைக்கழகத்தை மூடி, நினைவேந்தல் நிகழ்வுகளை நிறுத்தும் படையினரின் முயற்சிக்கு யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் பச்சைக் கொடி காட்டியிருப்பதுடன் படையினரின் வெற்றிவிழாக் கழியாட்டங்களில் பங்குபற்றுவதற்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், பதிவாளரும் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.


ஏற்கனவே கடந்த வருடம் மாவீரர் தின நிகழ்வுகளை நிறுத்தும் நோக்கோடு பல்கலைக்கழகக கல்விச் செயற்பாடுகளுக்கு விடுமுறை வழங்கிய பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் நிர;வாகம், அதே போலவே மே 16 முதல் 20 வரை பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கின்றது. அத்துடன் விடுதிகளில் இருக்கின்ற மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு கடுந்தொனியில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.


அத்துடன் பல்கலைக்கழகம் பூட்டப்பட்டிருக்கும் நாட்களில் பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களை நுழைய விடக்கூடாது என்று பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. பதிவாளர், மற்றும் துணைவேந்தருக்கு நெருக்கமான பாதுகாப்பு ஊழியர்கள் அழைக்கப்பட்டு, புலனாய்வாளர்கள் சிலர் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதுடன், பல்கலைக்கழகத்தினுள் நடைபெறுகின்ற கட்டட வேலைகளுக்கான தொழிலாளிகள், மேற்பார்வையாளர்கள் போல் அவர்கள் வருவார்கள் அவர்களைத் தடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger