Home » » கைப்பந்தாட்டத்தில் களமிறங்க இருக்கும் மோகன்லால்

கைப்பந்தாட்டத்தில் களமிறங்க இருக்கும் மோகன்லால்

Written By Namnilam on Friday, May 2, 2014 | 3:47 PM


மலையாள திரையுலகில் கொடி கட்டி பறக்கும் மோகன்லால் தற்போது விளையாட்டிலும் அவரது திறமையை வெளிபடுத்தவுள்ளார்.
கண்ணூர் பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களுக்காக நடத்தப்படும் கைப்பந்தாட்ட போட்டியில் கலந்துக்கொள்ள இருக்கிறாராம் மோகன்லால்.
பிராந்திய ராணுவ குழுவிற்கும், ஊடக நபர்களுக்கும் இடையே நடைபெறவுள்ள இப்போட்டியில் ராணுவ குழுவின் சார்பாக மோகன்லாலும், ஊடக நபர்களின் சார்பாக அந்த மாவட்ட ஆட்சியரும் கலந்துக்கொள்ள உள்ளனர்.
மோகன்லாலுக்கு மிகவும் பொருந்திய ஒரு கதாபாத்திரம் என்று கூறினால் அது ராணுவ அதிகாரி வேடமே, இந்நிலையில் ராணுவ குழுவின் சார்பாக மலையாள நடிகர் மோகன்லால் இந்த கைப்பந்தாட்டத்தில் கலந்துக்கொள்வது ரசிகர்கள் மனதில் போட்டியை காண்பதற்கான பேரார்வத்தை தூண்டியிருக்கிறது.
எப்படியோ!!!!!! நல்லா விளையாடுங்க சார் வாழ்த்துக்கள்

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger