Home » » எப்படி இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் இப்படி ஆயிடுச்சே..

எப்படி இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் இப்படி ஆயிடுச்சே..

Written By Namnilam on Friday, May 2, 2014 | 1:22 PM

எப்படி இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் இப்படி ஆயிட்டாங்களே என கேட்க வைக்கிறது அந்த அணியின் ஐபிஎல்-7 சீசனின் தொடர் வெற்றி. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணி குறிப்பிடத்தக்க அளவில் எந்த ஆட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அமீரக மண் அவர்களுக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே தெரியவில்லை. அங்கு விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றிக்கனியை தட்டிப்பறித்துள்ளனர்.


வெள்ளைக்கார பசங்களான கிளன் மேக்ஸ்வெல்லும், டேவிட்மில்லரும் சிக்சரும், ஃபோருமாக பொழந்துகட்டி பேட்டிங் வரிசையை அசைக்க முடியாமல் மாற்றிவிட்டனர். எதிரணி 205 ரன் எடுத்திருந்தாலும் இந்த ஜோடி இருந்தா வெற்றி நிச்சயம். ஐந்தே மேட்சில் 300 ரன்னை கடந்து மேக்ஸ்வெல் மஞ்ச தொப்பியோட ஆரவாரமாக வலம் வருவதை பார்க்கனுமே.


சென்னை டீமில் இருந்தவரைக்கும் வாரி வழங்கும் வள்ளலாக இருந்த நம்மூரு லட்சுமிபதி பாலாஜி, பஞ்சாப் போன உடனே பாயும் சிங்கமாக மாறிட்டாரு. அதுக்குள்ள 8 விக்கெட்டை எடுத்து அணியின் நம்பிக்கை நட்சத்திர பவுலராக மாறிட்டார். ஆஷஸ் ஹீரோ ஜான்சனும், இந்தியாவின் வளரும் நட்சத்திரம் சந்தீப் சர்மாவும் தலா 7 விக்கெட் எடுத்து 'நாங்களும் இருக்கோமுல்ல..' அப்டீன்னு காட்டிட்டாங்க. பவுலிங்கும் ஸ்ட்ராங்கா இருக்கிறது பஞ்சாப்போட பெரிய பலம்.


பஞ்சாப்போட திடீர் விஸ்வரூபத்துக்கு காரணம், அதன் கோச் சஞ்சய்பங்கர்தான்னு அடிச்சு சொல்லலாம். ஐபிஎல் சீசன்-7ல் விளையாடும் அணிகளில் இவர் மட்டும்தான் இந்தியாவை சேர்ந்த பயிற்சியாளர். மிதவேக பந்து வீச்சாளரான சஞ்சய்பங்கர், ஆல் ரவுண்டராக சில காலம் இந்திய அணிக்காக விளையாடியவர். சீனியர் வீரர்கள் சேவாக், பாலாஜி, ஜான்சன் ஆகியோருக்கு அணியில் முக்கியத்துவம் கொடுத்து ஊக்கம் கொடுப்பதே இவர்தான். அதனாலத்தான் சாம்பியன் அணிபோல பட்டையை கிளப்புது பஞ்சாப்.


சஞ்சர் பங்கரிடம் இதுபற்றி கேட்டால், நான்போய் மைதானத்தில் விளையாடவில்லை. அனைத்து பெருமையும் எங்கள் வீரர்களுக்குதான் போக வேண்டும். இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக திறமையை காண்பித்துள்ளார்கள் என்று தன்னடக்கத்தோடு பதில் சொல்றார். 'சரியான இடத்தில் பந்து போடுங்கள், முடிந்தால் எதிரணி வீரர்கள் அடித்துக்கொள்ளட்டும். நீங்களாக பந்துவீச்சு முறையை மாற்ற வேண்டாம்' என்பதுதான்


அமீரக போட்டிகள் முடிந்து வரும் 3ம்தேதி மும்பை அணியோடு இந்தியாவில் நடக்கும் பந்தையத்தில் மோதப்போகிறது பஞ்சாப். அமீரக தொடர் வெற்றியை, இந்தியாவிலும் அந்த அணி தக்க வைத்துக்கொள்ளுமா என்பதை அந்த பந்தையத்தை பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger