தமிழீழ விடுதலைப்புலிகளை மீள கட்டியெழுப்ப முயன்றவர்கள் என இலங்கை அரசால் குற்றச்சாட்டப்பட்ட கோபி, அப்பன், தேவிகன் ஆகியோரை நெடுங்கேணி, வெடிவைத்தகல்லு காட்டுப் பகுதியில், சுட்டுக் கொன்ற சம்பவத்தில் திறமையாகப் பணியாற்றிய சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு, சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்வில், சிறிலங்கா இராணுவத் தளபதி இந்த விருதுகளை வழங்கினார். வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, சிறப்புப் படைப்பிரிவின் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.எம்.வை.ஜே.ரத்நாயக்க, இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் கேணல் ரி.எஸ்.சாலி, 2வது சிறப்புப்படைப் பிரிவின் கட்டளை அதிகாரி லெப்.கேணல் எம்.பி.கே.எல்.அமரசிங்க, லெப். டி.எம்.திசநாயக்க, கோப்ரல் தினேஸ்குமார, கோப்ரல் ஜெயசிங்க, கோப்ரல் கமகே ஆகிய எட்டுப் பேருக்குமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர்களே, கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரும் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பாக செயற்பட்டவர்களாவர்.
Post a Comment