உலகின் தகவல் கதாநாயகர்கள் 100 பேரின் விவரத்தை வரலாற்றிலேயே முதல் முறையாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் என்ற சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ளது. உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ம.வ.கானமயில்நாதனும் அவர்களில் ஒருவராக தகவல் கதாநாயகனாக அந்த அமைப்பால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஒருவருட காலத்திற்குள் உதயன் பத்திரிகைக்கு கிடைக்கும் இரண்டாவது சர்வதேச அங்கீகாரம் இதுவாகும். சர்வதேச ஊடகசுதந்திர தினமான மே மூன்றாம் நாளையொட்டி எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தகவல் கதாநாயகர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
இதில் உலக நாடுகள் பலவற்றில் இருந்து பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் 100 பேருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
உதயன் மீதான தாக்குதலின் 8 ஆண்டுகள்
உதயன் பத்திரிகை நிறுவனத்தின் மீது காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. கருத்துக்களை கருத்துகளால் எதிர்கொள்ள முடியாதவர்கள் துப்பாக்கி முனையில் உதயனை முடக்கிவிடலாம் என முனைந்து அதில் தோற்றப் போனதை கடந்து போன ஆண்டுகள் நிரூபித்து உள்ளமையை உலகம் அறியும்.
எத்தடை வரினும் அதனை தயங்காது எதிர்கொண்டு ஊடகங்கள் தங்கள் பணியை நேர்மையுடன் ஆற்றியமையே உலக வரலாறு நமக்குச் சொல்லும் பாடம் ஆகும்.
Post a Comment