Home » » பாதாள உலகில் விண்வெளிப் பயிற்சி

பாதாள உலகில் விண்வெளிப் பயிற்சி

Written By Namnilam on Thursday, July 17, 2014 | 3:42 PM

விண்வெளி போன்ற தோற்றமுடைய பாதாளக்குகைகளில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி முகாம்களை இவ்வாண்டு கோடைக்காலத்தில் நடத்துவதற்கு ஐரோப்பிய விண்வெளி முகாமை திட்டமிட்டுள்ளது. இதற்காக சார்டினியாவில் உள்ள பாதாளக் குகைகளை இது தேர்வு செய்துள்ளது. 

இதற்கென ஐந்து விண்வெளி வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு வார காலத்துக்கு இந்த பாதாளக் குகைகளில் தங்கியிருப்பார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில் செயற்படுவது போல் இவர்கள் நேரக் கட்டுப்பாடு, நடவடிக்கைகள், சாதனங்கள் கையாளுதல், தகவல் தொடர்பு நடைமுறைகளை இவர்கள் பின்பற்றுவார்கள். குகைகளில் நடப்பது ஒரு முற்றிய ஆய்வாகும் என்று குகைகள் முற்றாய்வு பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ சாரோ கூறுகிறார். 

கடந்த ஆண்டில் நடந்ததை விட இவ்வாண்டு பயிற்சி கடினமாக இருக்கும். ஏனெனில், இவ்வாண்டில் கீழ் முகாமில் இருந்து ஆய்வாளர்கள் சற்று மேலும் ஆழமாகச் செல்வார்கள் என்றும் அவர் கூறினார். பயிற்சி விண்வெளி வீரர்கள் முதல் முறையாக அடித்தள முகாமில் இருந்து மேலும் ஐந்து கிலோ மீட்டர் ஆழமாகச் சென்று முதல் எல்லைச்சாவடியை அமைப்பார்கள். இவர்களுக்கு முன்பு முகாம்களில் தங்கியிருந்தவர்கள் உருவாக்கிய வரைபடங்களையும், திசை வழியையும் பயன்படுத்துவார்கள். 

இவர்கள் தாங்கள் செல்லும் வழியில் உள்ள கரியமில வாயுவின் குணாம்சங்களை அளப்பதுடன், தாங்கள் சந்திக்கும் உயிரினங்களின் நுண்ணுயிர் மாதிரிகளையும் சேகரிப்பார்கள். இந்த அனுபவம் விண்வெளியில் கிடைக்காது. இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயன்படுத்தப்படும் புதிய சாதனங்களையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவார்கள்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger