Home » , » சூர்யாவை பின்னுக்குத் தள்ளிய சன்னி லியோன்

சூர்யாவை பின்னுக்குத் தள்ளிய சன்னி லியோன்

Written By Namnilam on Thursday, July 17, 2014 | 3:47 PM

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தின் காணொளி முன்னோட்டம் ஒரே நாளில் பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்தது என்று கோலிவூட்டில் ஒருநாளும் இல்லாத திருநாளாக விழா எடுத்தார்கள். 

இப்படி விழா எடுத்தால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் 'அஞ்சான்' காணொளி முன்னோட்டம் வெளியான சில தினங்களுக்கு பின் இந்தியத் திரையுலகத்தின் புதிய கவர்ச்சிக் கன்னியான சன்னி லியோன் நடித்துள்ள 'பிங் லிப்ஸ்’ என்ற காணொளி முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. இந்தக் காணொளி 'அஞ்சான்' படக் காணொளியை விட மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. இதன் மூலம் 'அஞ்சான்' காணொளியை அழகி 'சன்னி லியோன்' பின்னுக்கு தள்ளிவிட்டார். 

'பிங் லிப்ஸ்’ பாடல் காணொளியானது 'ஹொட் ஸ்டோரி 2' படத்தில் இடம் பெறுகிறது. இந்த இடத்தில் ஒரு சிறிய வியாபார கணக்கு. யூடியூப் பார்வையாளர்களை அள்ளும் எண்ணிக்கைக்கும் ஒரு படத்தின் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவான ஒன்று. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் வெற்றிப் படங்களாகச் சொல்லப்படும் 'கோலி சோடா', 'மஞ்சப் பை' ஆகிய படங்கள் சில லட்சம் பார்வையாளர்களை மட்டுமே யூடியூபில் பெற்றன. 

ஆனால், இந்த இரண்டுப் படங்களும் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தந்ததன. 'அஞ்சான்’ படத்தின் காணொளி முன்னோட்டப் பார்வைகள் இதுவரை 22,52,000 பேருக்கும் அதிகமாக உள்ளன. இவர்கள் அனைவரும் சராசரியாக 100 ரூபாய் கொடுத்து தியேட்டருக்குப் படம் பார்க்க வந்தால் மொத்த வசூல் தொகை 23 கோடி ரூபாய் கிடைக்கும். இவர்கள் தங்களது நண்பர்களில் ஒருவரிடம் சொன்னால் கூட அவர்கள் வந்து பார்த்தால் மொத்த வசூல் தொகை 46 கோடி ரூபாய் வந்து விடும். 'அஞ்சான்' படத்தின் தயாரிப்புச் செலவு 50 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் இந்த பார்வையாளர்களால் மட்டுமே 95 சதவீத வசூல் கிடைத்து விடும். 

இது எத்தனை நாள்களில் சாத்தியமாகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு முன் உங்களுக்கு நேரமிருந்தால் சன்னியின் காணொளிப் பாடலை கீழே பாருங்கள்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger