Home » » மின்னஞ்சல் வளர்ந்த கதை

மின்னஞ்சல் வளர்ந்த கதை

Written By Namnilam on Thursday, August 28, 2014 | 10:29 PM

கைகளால் கடிதம் எழுதும் வழக்கம் இன்றைய தலைமுறையிடம் இல்லை. காரணம் மின்னஞ்சல். இணையத்தின் கொடையென்றே மின்னஞ்சலை வர்ணிக்கலாம். ஒருவரின் வீட்டு முகவரி எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மின்னஞ்சல் முகவரியும் முக்கியமானதாக இன்று மாறி இருக்கிறது. ஒரு நிமிடத்தில் உலகமெங்குமிருந்து கோடிக்கணக்கான மின்னஞ்சல்கள் அனுப்படுகின்றன. 

இவையனைத்தும் சரியான முகவரியில் வழி தவறாமல் சென்று சேர்கின்றன. இதனை அனுப்புபவர் கவனக்குறைவாலோ, சரியான முகவரியை உள்ளிடாமல் இருந்தாலோ மட்டுமே அவை வழிமாறிச் செல்கின்றன. அதேபோல இணையப்பாதையில் பிரச்னைகள் இருந்தால் மட்டுமே தடை அல்லது தாமதம் ஏற்படுகிறது. 

இத்தகைய நிலையும் சில சமயங்களீல் மட்டுமே. மற்றபடி எந்த நேரத்திலும் சரியான முகவரிக்கு குறைவான நேரத்தில் செய்தியைக் கொண்டு சேர்த்துவிடும் என்பதே உண்மை. சேவர்களும் ஏஜெண்டுகளும் இதற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு மிக நுட்பமாக எழுதப்பட்டுள்ளது. நாம் அனுப்பும் மின்னஞ்சல் (கூகுள், யாகூ, வெப், ஆபீஸ் 356 போன்ற எந்த ஒரு வெப் மெயில் சேவையை நாம் பயன்படுத்தினாலும்) நாம் கணக்கு வைத்திருக்கும் நிறுவன மின்னஞ்சல் சேவருக்கு அனுப்பப்படுகிறது. 

இப்பணியை செய்வது MSA (Mall Submission Agent ) ஆகும். இதனிடமிருந்து செல்லும் மின்னஞ்சல் டெயில் டிரான்ஸ்பர் ஏஜென்ட் (Mall Transfer Agent ) எனப்படும் சேவருக்கு அனுப்பப்படுகிறது. ஒரே மின்னஞ்சல் சேவைக்குள் அல்லது வேறு நிறுவன மின்னஞ்சல் சேவை எதுவானாலும் நம்முடைய செய்தியின் பயணம் என்பது இதுப்போன்ற பல மெயில் டிரான்ஸ்பர் ஏஜெண்டுகளை கடந்து சென்றே சேர்கிறது. 

இந்த மின்னஞ்சல் பரிமாற்ற சேவர் தபால் அலுவலகம் போல் செயற்பட்டு வரும் மின்னஞ்சல்களின் முகவரியைப் படித்து அதற்குரிய சேர்வரை நோக்கி அனுப்பி வைக்கிறது. இந்த இடத்தில்தான் @ குறீயீட்டிற்கு முன்னதாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். இதற்கு அடுத்துள்ள பெயர் நாம் மின்னஞ்சல் கணக்கு வைத்துள்ள யாகூ அல்லது நம்முடைய சொந்த இணையத் தளத்தின் டொமைன் பெயரை பின்னொட்டாகக் கொண்டிருக்கும். டொமைன் மற்றும் ஐ.பி எண் இந்த பின்னொட்டு டொமைன் பெயருக்கான ஐ.பி. எண்ணைத் தேடுகிறது. 

அதன்பின் அதற்குறிய சர்வரை நோக்கி நம்முடைய மின்னஞ்சல் தகவல் நகர்த்தப்படுகிறது. மெயில்களை பெற்று உரியவருக்கு பிரித்தனுப்பும் வேலையை மெயில் எக்ஸ்சேஞ்சர் (MX- Mail exchanger) என்ற சர்வர் செய்கிறது. இதிலிருந்து மெயில் டெலிவரி ஏஜெண்ட் (Mail deleivery agent ) என்ற சர்வருக்கு அனுப்பப்பட்டு குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சல் பக்கத்தில் காட்டப்படுகிறது. 

இப்பணிகளைச் செய்யும் கட்டமைப்பிற்கு எஸ்.எம்.டிபி ( Simple mail Transfer Protocol ) என்று குறிப்பிடுகின்றனர். அதிகமான மின்னஞ்சல்கள் [அயணிக்கும் போது அவற்றை வரிசைப்படுத்தி நிர்வகிப்பதில் இது முதன்மை பெறுகிறது. இப்பணிகள் அனைத்தும் வெப்மெயில் சர்வர் தொகுப்பில் நடைபெறுபவை. அதிகமான மின்னஞ்சல்களை நிர்வகிக்க கணினியிலேயே தனியாக ஒரு மென்போருளை நிறுவி பயன்படுத்துபவர்களும் உண்டு. 

உதாரணமாக, மைக்ரோசொப்ட் அவுட்லுக், மொஸில்லாவின் தண்டர்பெர்ட் ஆகிய கணினி மின்னஞ்சல் தொடர்பான மென்பொருள்களை MUA ( Mail User Agent) இவ்வாறு குறிப்பிடுகின்றனர். இம்மென்பொருள்களை மெயில் சேவருன் இணைத்துவிட்டால் நமக்கு வரும் மின்னஞ்சல்களை கணினியில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளும். 

இணைய இணைப்பு இல்லாத போதும் ஏற்கனவே வந்திருக்கும் மின்னஞ்சல்களை எளிதாக நாம் திறந்து பார்த்துக் கொள்ளவும், எளிதாக நிர்வகிக்கும் இம்மென்பொருள்கள் உதவுகின்றன. 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger