Home » » அன்ரொய்ட் பதிப்புகள்: அப்பிள் பை முதல் கிட்கேட் வரை

அன்ரொய்ட் பதிப்புகள்: அப்பிள் பை முதல் கிட்கேட் வரை

Written By Namnilam on Thursday, August 28, 2014 | 12:02 PM

அன்ரொய்ட் இயங்குதளம் லினக்ஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு முதன் முதலில் தொடுதிரை செல்லிடப் பேசிகளுக்காக உருவாக்கப்பட்டது. அன்ரொய்ட் இன்க் என்ற நிறுவனத்தால் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் திட்டத்தில் உருவான இவ்வியங்குதளத்தை 2005ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் ஓப்பன் ஹேண்ட்செட் அல்லயன்ஸ் என்ற தனது சார்பு நிறுவனத்திற்காக வாங்கியது.

இதன் முதல் பதிப்பு நவம்பர் 7, 2007 அன்று வெளியானது. ஒவ்வொரு பதிப்பிற்கும் உணவுப் பண்டம் ஒன்றின் பெயரை ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி பதிப்பு பெயராக வைக்கும் வித்தியாசமான வியாபார அணுகுமுறையை 3ஆவது பதிப்பிலிருந்து தொடங்கியது கூகுள். அல்பா பதிப்பு 1.0 (அப்பிள் பை) இந்த முதல் பதிப்பில்தான் பிளே ஸ்டோர் எனப்படும் விரும்பிய செயலிகளை போன்களில் பதிவிறக்கி பயன்படுத்தும் முறை அறிமுகமானது. 

அதற்கு முன்பு வந்த போன்களில் நிறுவனம் பதிந்து வைத்திருக்கும் செயலிகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையிருந்தது. இப்பதிப்பு எச்.டி.சி. ட்ரீம் போனில் பயன்படுத்தப்பட்டது. பீட்டா பதிப்பு 1.1 (பனானா பிரெட்) இது அறிமுகமானபோது பல்வேறு மென்பொருள் பிரச்சினைகளின் காரணமாக வந்த சுவடே தெரியாமல் காணாமல் போனது. கப் கேக் 1.5 பனானா பிரெட் தோல்வியடைந்ததால் மேம்படுத்தப்பட்ட அடுத்தப் பதிப்பு கப் கேக் 1.5 என்ற பதிப்பை ஏப்ரல் 30, 2009 அன்று வெளியிட்டது. 

இதில் வீடியோ பதிவு செய்யும் வசதியை கூகுள் அறிமுகம் செய்தது. டோனட் 1.6 செப்ரெம்பர் திரைக் காட்சியில் கூடுதல் பிக்ஸெல் ரெசல்யூசன், மொபைல் டேட்டா பயன்பாட்டில் கூடுதல் திறன், வைபை இணைப்பு மற்றும் பல மேம்படுத்தல்களை இது கொண்டிருந்தது. செப்ரெம்பர் 15, 2009இல் வெளியிடப்பட்டது. எக்ளெர் 2.0/2.1 டோனட் வெளியாகி, ஒரு மாதத்தில் ஒக்ரோபர் 27, 2009இல் இது வெளியானது. 

இதன் மூலம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு பரவலான இடம் கிடைக்கத் தொடங்கியது. ஃப்ரையோ 2.2 இந்த பதிப்பு மே 20, 2010இல் வெளியானது. இதன் முக்கிய சிறப்பம்சமாக மெமரி கார்டில் அப்ளிகேஷன்களை நிறுவும் வசதி, யு.எஸ்.பி. போர்ட் மற்றும் ஒய்ஃபீ ஹாட் ஸ்பாட் சப்போர்ட் ஆகியவற்றைக் கூறலாம்.வேகமும் மேம்படுத்தப்பட்டிருந்தது. சாம்சங் கேலக்சி போன்களின் வரவால் நுகர்வோரை எளிதாக சென்றடையத் தொடங்கியது. 

ஜிஞ்சர் ப்ரெட் 2.3 டிசெம்பர் 6, 2010ல் வெளியான ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம், முழுமையும் திறன் மாற்றப்பட்ட அன்ரொய்ட் சிஸ்டமாக இருந்தது. அத்துடன் சாம்சங், சோனி, எச்.டீ.சி. போன்ற நிறுவனங்கள் இந்த பதிப்புடன் கூடிய ஸ்மார்ட் போன்களைக் களமிறக்கின. இன்றும் பல பயன்படுத்தப்படும் இயங்குதளமாக இது உள்ளது. 

ஹனி கோம்ப் 3.0 இது டேப்லட் கணினிகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட அன்ரொய்ட் இயங்குதளமாகும். இதன் ஹோலோ யூசர் இன்டர்பேஸ் சற்று மெருகூட்டப்பட்டு கிடைத்தது. ஆனால் இப்பதிப்பை மொபைல் போன்களில் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. செயலிகளை வடிவமைப்பதிலும் பல சிக்கல்களை சந்தித்தது இப்பதிப்பு. இப்பதிப்பு, பெப்ரவரி 22, 2011ல் வெளியானது. ஐஸ்கிரீம் சாண்ட்விச் 4.0 ஒக்ரோபர் 11, 2011இல் வெளியான இந்த சிஸ்டம், டேப்லட் கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கு ஒருங்கிணைந்த பதிப்பாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

முகப்பு வடிவமைப்பு (Interface) முழுவதும் மாற்றியமைக்கப்பட்டது. பேசுவதைப் புரிந்துகொண்டு செயற்படும் வசதி, இரண்டு அன்ட்ராய்ட் போன்களுக்கிடையில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்(near field communication) வசதி, குரோம் பிரவுசர், ஃபேஸ் அன்லாக் போன்ற பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஜெல்லி பீன் 4.1 ஜூலை 9, 2012இல் வெளியான இப்பதிப்பில் கூகுளின் பல்வேறு பயன்பாடுகள் சேர்க்கப்பட்டன. கூகுள் குறிப்பிட்ட சில வகை தகவல்களை, வகைப்படுத்தி தேடித் தரும் வசதி இதில்தான் அறிமுகமானது. 

செயல்பாட்டினை மெதுவாக்கிய சில சிறிய தவறுகளைச் சரி செய்தது. பிளே ஸ்டோர் அப்ளிகேஷன்களின் எண்ணிக்கையும் பல லட்சங்களாக உயர்ந்தது. கிட்கேட் 4.4 இப்பதிப்பு ஒக்ரோபர் 31, 2013இல் வெளியானது. இது இயங்குவதற்கு மொபைலில் குறைந்தபட்ச ரேம் அளவு 512 எம்.பியாக இருக்கவேண்டும் என்று வரைமுறை நிர்ணயம் செய்யப்பட்டது. ஸ்கிரீன் ரெக்கார்டிங், ஒயர்லெஸ் பிரிண்டிங் வசதி உள்ளிட்ட பல வசதிகளும், ஒய்ஃபி, மொபைல் டேட்டா செட்டிங்குகளில் மாற்றங்களையும் கொண்டு வந்தது. பல முந்தைய பிழைகள் சரி செய்யப்பட்டது. 

அன்ரொய்ட் இயங்கு தள வரிசையில் தற்போது 4.4.4 என்ற பதிப்பு பயன்பாட்டில் உள்ளது. அன்ரொய்ட்டின் அடுத்த பதிப்பின் முன்னோட்டமாக எல் என்ற அறிமுகப் பதிப்பு கூகுள் நெக்ஸஸ் போன்களில் வெளியாகியுள்ளது. இதன் முழுமையான பதிப்பு வருகிற நவம்பர் மாதம் 7ஆம் தேதி ஆண்ட்ராய்டின் 6வது பிறந்த நாள் சமயத்தில் வெளியிடப்படக்கூடும் என்று தெரிகிறது. 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger