Home » » பென்குயின்களின் மொழியை புரிந்துகொள்ளும் கருவி

பென்குயின்களின் மொழியை புரிந்துகொள்ளும் கருவி

Written By Namnilam on Thursday, August 14, 2014 | 8:58 AM

இத்தாலிய ஆய்வாளர்கள் பென்குயின் பறவைகளின் மொழியை புரிந்துகொள்ளும் வழியை கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். இத்தாலியின் டூரின் நகரில் உள்ள ஸூம் வனவிலங்கு காப்பகத்தில் 48 ஆபிரிக்க பென்குயின்கள் சிறைச் சமூகமாக இங்கு வைக்கப்பட்டுள்ளன. 

அவற்றின் ஒலிகளும், நடமாட்டமும் ஒலி மற்றும் ஒளிப்பதிவுக் கருவிகளில் பதிவு செய்யப்பட்டன. இவற்றை ஆய்வாளர்கள் சேகரித்து, பல்வேறு இனங்களில் பிரித்து பகுத்தாய்வு நடத்தினர். பதிவு செய்யப்பட்டவை பல நூறு ஒலிகளில் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் நான்கு வகை குரலொலிகளின் கீழ் வருகின்றன. 

ஒன்று தொடர்பு அழைப்பு. இது தனிமையில் இருக்கும் பறவை விடுக்கும் அழைப்பு அல்லது அபயக்குரல் ஆகும். இரண்டாவது தாக்கப்படுவதைத் தெரிவிக்கும் வேதனைக்குரல். மூன்றாவது இணைசேரும் காலங்களில் ஒற்றைப் பறவைகள் தன்னுடைய இணையைத் தேடி விடுக்கும் காதல் பாடல் அல்லது அழைப்பு ஆகும். நான்காவது கூடுகளில் இருக்கும் இணைகள் தங்களுடைய ஆனந்தத்தை வெளிப்படுத்தும் பாடல் ஆகும். ஆபிரிக்க பென்குயின்கள் சமூகத்துடன் மட்டுமல்லாது அறிந்தவர்களிடமும் நெருங்கிப் பழகக்கூடியவை என்பதுடன் இவை கூச்சலிடும் வழக்கம் கொண்டவையாகும். 

ஆபிரிக்க பென்குயின்களின் ஒலி எழுப்பும் வகைகளின் விளக்கங்கள் அனைத்தும் மேலே கூறிய நான்கு வகைக்குள் அடங்கி நிற்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவற்றின் குரல் லயமிக்க தெளிவான கட்டமைப்புக் கொண்டதாக இருக்கிறது. அவை குரல் எழுப்பும் போது அவற்றின் அலகு பாதி திறந்தபடி இருக்கும் என்றும் அவை நின்றபடி தங்களுடைய கழுத்தை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு உயர்த்திக் குரல் கொடுக்கின்றன. 

பாலூட்டிகளின் ஒலி நாளங்களை விட இவற்றின் ஒலி நாளங்கள் வேறுபட்டுள்ளன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger