Home » » பூமி எவ்வாறு சூடாகிறது? புதிய கண்டுபிடிப்பு

பூமி எவ்வாறு சூடாகிறது? புதிய கண்டுபிடிப்பு

Written By Namnilam on Saturday, August 16, 2014 | 12:38 PM

நச்சுவாயுக்களால் அடிவளி மண்டலத்தில்(toposphere) நீராவியின் அளவு அதிகரித்து வருவதால் அடுத்த பத்தாண்டில் தட்ப வெப்ப நிலை மீது உருவாகும் தாக்கங்கள் தீவிரம் அடையும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அடிவளி மண்டலத்தின் மேல் மட்டத்தில் மனிதர்களின் நடவடிக்கைகளால் நீராவியின் அளவு அதிகரித்துள்ளது என்பதை உறுதி செய்யும் முதல் ஆய்வு இதுதான் என்று மியாமி பல்கலைக்கழக காற்று மண்டல அறிவியல் பேராசிரியர் சோடென் கூறுகிறார். 

கடந்த முப்பது ஆண்டுகளில் மேல்மட்ட அடிவளி மண்டலத்தில் ஈரப்பதம் உருவாகும் போக்கிற்கான காரணத்தை ஆய்வு செய்வதற்கு சோடெனும் அவருடைய கூட்டாளிகளும் என்.ஓ.ஏ.ஏ செயற்கைக்கோள்கள் சேகரித்த அடிவளிமண்டலத்தில் உள்ள நீராவி அளவுகளைப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்கள் தட்பவெப்ப மாதிரி சோதனைகளைப் பயன்படுத்தி, இங்கு நீராவியின் அளவு அதிகரித்து வருவதை, எரிமலை, சூரிய மண்டலத்தில் உருவாகும் மாற்றங்களைக் கொண்டு விளக்க முடியாது என்றும் ஆனால் நச்சு வாயுக்கள் அதிகரித்து வருவதைக் கொண்டு விளக்க முடியும் என்று நிரூபித்தனர். 

காற்று மண்டலத்தில் உள்ள பூமியின் கதிர்வீச்சு வெப்பத்தைப் பயன்படுத்தி நச்சு வாயுக்கள் வெப்பத்தை அதிகரித்து வருகின்றன. இந்த சூட்டால் காற்றுமண்டலத்தில் உள்ள நீராவி கூடுவதும் அதிகரிக்கிறது. இந்தகாற்று மண்டலத்தில் நச்சுவாயுக்கள் மிகுதியாக உள்ளன. காற்றுமண்டலம் ஈரமாவதால் கூடுதல் கதிர்வீச்சு வெப்பம் உள்வாங்கப்படுகிறதுடன், வெப்பம் அதிகரிப்பதும் கூடுகிறது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களை எரிப்பதால் தட்பவெப்பம் சூடடைகிறது. அதனால் காற்றுமண்டலத்தில் உள்ள நீராவியின் அடர்த்தியும் அதிகரிக்கிறது. இது புவிவெப்பமயமாவதைத் தூண்டிவிடுகிறது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger