Powered by Blogger.
Latest Post
Showing posts with label இராணுவத்தினர். Show all posts
Showing posts with label இராணுவத்தினர். Show all posts

முழங்காவில் பகுதியில் இராணுவத்தினர் திடீர் சோதனை நடவடிக்கை!

Written By Namnilam on Sunday, February 23, 2014 | 4:08 AM

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் இராணுவத்தினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். முழங்காவில் சந்தியை அண்மித்த பகுதியில் நான்கு பிரிவுகளாக குழுக்களாக நின்று கொண்டிருக்கும் இராணுவத்தினர், வீதியில் பயணிப்போர் அனைவரையும் இடைமறித்து அவர்களுடைய உடைமைகள் அனைத்தையும் சல்லடைபோட்டு தேடுதல் நடத்திவருகின்றனர்.


army


திடீர் தேடுதல் நடவடிக்கை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அச்சநிலையினைத் தோற்றுவித்திருக்கிறது. இதேவேளை, இந்தச் சம்பவம் மேற்கொள்ளப்படுவதற்கான காரணம் தொடர்பில் இராணுவத்தினரிடம் கேட்டபோது, தமது அதிகாரி ஒருவர் ஆவணம் ஒன்றினை யாரிடமோ கொடுத்திருப்பதாகவும், அதனைத் தேடுவதாகவும் தெரிவித்திருக்கின்ற அவர்கள், மேலதிக விபரங்களை வெளியிட மறுப்புத் தெரிவிப்பதாக படையினரின் சோதனை நடவடிக்கைக்கு உட்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு படையினர் தெரிவித்திருப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger