Powered by Blogger.
Latest Post
Showing posts with label புத்தகங்களை. Show all posts
Showing posts with label புத்தகங்களை. Show all posts

வடக்கில் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்களை வழங்கிய நாமல் ராஜபக்ச

Written By Namnilam on Sunday, February 23, 2014 | 10:33 PM

விடுதலைப் புலிகளின் முன்னாள் கோட்டையான முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தொடர்ந்தும் நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.


namal-rajapakse-01 namal-rajapakse-02



கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை அப்பியாச புத்தகம் வழங்கியதாக நாமல் ராஜபக்ச சில மணித்தியாலங்களுக்கு முன்னர் டுவிடடரில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நாளைய தலைமைத்துவம் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நாமல் ராஜபக்ச என எழுதப்பட்ட பதாகை பின்னர் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதுடன், அவர் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமும், மாணவர்கள் அமர்ந்துள்ளமை மற்றும் அப்பியாசப் புத்தகங்கள் காணப்படும் புகைப்படத்தையும் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

புத்தகங்கள் மிக அருகில் தெரியும் வகையில் பிடிக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில் நாமல் ராஜபக்ச பல தோற்றங்களில் காணப்படும் படங்கள் புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளன.

சில புத்தங்களில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளின் படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger