Powered by Blogger.
Latest Post
Showing posts with label மயங்கி விழுந்த. Show all posts
Showing posts with label மயங்கி விழுந்த. Show all posts

வவுனியாவில் விளையாட்டுப்போட்டியில் மயங்கி விழுந்த பெற்றோர்

Written By Namnilam on Tuesday, February 25, 2014 | 9:46 PM

வவுனியா இறம்பைக்கும் மகளிர் கல்லூரி ஆரம்ப பிரிவு விளையாட்டுப்போட்டியின் போது பெற்றோர்கள் மயங்கி விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


aasp06


ஆரம்ப பிரிவு மாணவர்களின் விளையாட்டுப்போட்டி இன்று மதியம் (25.2) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றபோது பெற்றோர் மற்றும் பார்வையாளர்களின் தொகைக்கு ஏற்ப இடம் ஒதுக்கப்படாமையினால் பெற்றோர்கள் கடும் வெயிலில் நின்று தமது பிள்ளைகளின் நிகழ்வுகளை பார்வையிடவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.


இதன் காரணமாக வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் சில பெற்றோர்கள் மயங்கி விழுந்த நிலையில் அவர்களுக்கு மற்றைய பெற்றோர் முதலுதவிகளை வழங்கியிருந்தனர்.


இதேவேளை பெற்றோர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படாமையினாலும் கை குழந்தைகளுடன் வருகை தந்திருந்த அதிகளவான பெற்றோர் பெரும் சிரமங்கைள எதிர்கொண்டதுடன் விசனமும் தெரிவித்திருந்தனர்.

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger