பலத்த எதிர்பார்ப்புக்களைத் தோற்றுவித்திருக்கும் ஜெனீவா தீர்மானத்திற்கு கூட்டமைப்பின் பங்களிப்பு, இரணைமடு நீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று (27) காலை 9.45 மணியிலிருந்து யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் ஒன்றுகூடல் நடைபெறுகின்றது. வன்செயல்களால் உயிர் நீர்த்தோரினை நினைவு கூர்ந்து மௌனப் பிரார்த்தனையுடன் இந்தக் ஒன்றுகூடல் ஆரம்பமாகியது.
இவ் ஒன்றுகூடலில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன், சிவஞானம் சிறிதரன், மதியாபரணம் ஆபிரஹாம் சுமந்திரன், பி.அரியேந்திரன், பொன் செல்வராசா, வடமாகாண சபைத் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
Powered by Blogger.
Latest Post
Showing posts with label மாகாண சபை. Show all posts
Showing posts with label மாகாண சபை. Show all posts
5:20 PM
கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டம் தொடங்கியது
Written By Namnilam on Thursday, February 27, 2014 | 5:20 PM
Labels:
உறுப்பினர்கள்,
கூட்டமைப்பின் நாடாளுமன்ற,
தாயகம்,
மாகாண சபை