Powered by Blogger.
Latest Post
Showing posts with label விநியோகித்தவர். Show all posts
Showing posts with label விநியோகித்தவர். Show all posts

வெடிபொருள் விநியோகித்தவர் பொலிஸில் சரண்

Written By Namnilam on Monday, February 24, 2014 | 10:11 PM

யாழ்ப்பாணம், பாஷையூர் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 72 கிலோ வெடிபொருட்களை விநியோகித்தவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று (24) சரணடைந்துள்ளார். bomb

நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பொலிஸில் சரணடைந்துள்ளார் என்று  யாழ். குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.எல்.விக்கிரமாரச்சி தெரிவித்தார். பாஷையூர் பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (18) 16 கிலோ சி.டி. ரக வெடிபொருட்களும் 56 கிலோ ரி.என்.ரி ரக வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. 

இச்சம்பவத்துடன் தொடர்புடையவரான பாஷையூரைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த புதன்கிழமை (19) ஓமந்தைப் பகுதியில் வைத்து ஓமந்தைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்படி கடந்த 20ஆம் திகதி பூநகரிப் பகுதியில் வைத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் தேசிய பாதுகாப்புக்கு எதிராக செயற்பட்டமைக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் அனுமதியுடன் தொடர்ந்து 3 நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இது தவிர மேலும் 3 மாதங்கள் இவர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று நேற்று (23) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்நிலையிலேயே இச்சம்பவத்துடன் தொடர்புடையவராக கூறப்படும் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (24) பொலிஸில் சரணடைந்துள்ளார் என்று பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger