Powered by Blogger.
Latest Post
Showing posts with label devar. Show all posts
Showing posts with label devar. Show all posts

பொது இடத்தில் தேவர் சிலை, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு

Written By Namnilam on Tuesday, March 11, 2014 | 9:54 PM

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ளது கருங்கட்டான்குளம். இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் அங்குள்ள ஒரு பொது இடத்தில் தேவர் சிலை வைக்க முடிவு செய்தனர்.


இதற்காக 6½ அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட தேவர் சிலையை அங்குள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் வைத்திருந்தனர்.


இதுபற்றி தகவல் அறிந்ததும் சின்னமனூர் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தேவர் சிலை அமைக்க ஏற்பாடு செய்தவர்களிடம், "தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அனுமதியின்றி பொது இடத்தில் சிலை வைக்கக்கூடாது. அரசிடம் உரிய அனுமதி பெற்றே சிலை வைக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினர்.


மேலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட சமுதாய பிரமுகர்கள் சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger