Home » , » நன்றி கெட்டத்தனமாக விஜயை போட்டுத் தாக்கிய த்ரிஷா

நன்றி கெட்டத்தனமாக விஜயை போட்டுத் தாக்கிய த்ரிஷா

Written By Namnilam on Tuesday, July 8, 2014 | 6:50 PM


நாட்டில் எத்தனையோ முக்கிய பிரச்சினைகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிடு அடுத்த 'சூப்பர் ஸ்டார்' யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டது 'குமுதம்' வார இதழ். விஜயே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தமிழகம் முழுவதும் வாசகர்கள் வாக்களித்தனர் எனவும் அதனால் விஜய்க்கே முதலிடம் என்றும் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்குப் பிறகு வரிசையாக சர்ச்சைகள் எழுந்தன. 

விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சமூக வலைத் தளங்களில் மாறி மாறி குழாயடிச் சண்டையில் ஈடுப்பட்டு தமிழர்கள் என்றாலே சினிமாவாலும் நடிகர்களாலும் அழிந்தவர்கள் அழிந்து வருபவர்கள் என்பதை நிரூபித்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்ட கருத்துக் கணிப்பில் 2013ஆம் ஆண்டின் ஹீரோக்ககளின் பட்டியலில் விஜய்க்கு 5ஆவது இடமே கிடைத்தது. தற்போதைய முன்னணி நாயகியாக கருதப்படும் த்ரிஷாவும் தனது மனம் கவர்ந்த ஹீரோக்கள் பட்டியலில் விஜய்க்கு 5ஆவது இடத்தைத்தான் கொடுத்திருக்கிறார். அவருடைய பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது அஜித். இரண்டாவது இடத்தில் சூர்யாவும், மூன்றாவது இடம் விக்ரமுக்கும், நான்காவது இடத்தில் கமல் என்றும் வரிசைப்படுத்தியிருக்கிறார். 

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெட்னாவின் 27ஆவது ஆண்டு விழாவில் தான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த தர வரிசையை அளித்திருக்கிறார் த்ரிஷா. அப்போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் யாருடன் உங்களுக்கு ஜோடியாக நடிக்கும் போது கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது என்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியைக் கேட்டனர். அதே மேற்கண்ட தரவரிசைப் பட்டியலை தந்திருக்கிறார் த்ரிஷா. 

த்ரிஷாவின் இந்த பதில் விஜய் ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது. மாறாக விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்த 'கில்லி' படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே த்ரிஷா தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களிலும் விஜய் ஜோடியாக நடித்திருக்கிறார். விஜயுடன் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை ரிசார்ட் ஒன்றில் இரவுப் பார்ட்டியில் மது அருந்துவிட்டு சாலையில் வந்து ஆட்டம் போட்டபோது, சென்னை மாநகரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விஜயின் தலையீட்டால் அவர் விடுவிக்கப்பட்டதும் கடந்த 2006ஆம் ஆண்டு பரப்பரப்பை கிளப்பியது இந்த இடத்தில் நினைவு கூரத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger